ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

தியாகி இம்மானுவேல் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்

தென்காசி:"தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்' என மள்ளர் நாடு நிறுவன தலைவர் சுப. அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் தென்காசியில் நிருபர்களிடம் கூறியதாவது:""மள்ளர் நாடு மாநில செயற்குழு கூட்டம் குற்றாலம் ஹரிட்டேஜ் ஓட்டலில் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் செப்.11ம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அன்று பரமக்குடியில் நடக்கும் இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளோம்.பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரணை செய்யும் சி.பி.ஐ., வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு கோர்ட்டில் தண்டனை பெற்றுத்தர வேண்டும். வழக்கு இழுத்தடிக்கப்பட்டால் மள்ளர் நாடு சுப்ரீம் கோர்ட்டை அணுகி எங்களின் உரிமையை வென்றிடுவோம்.

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் பரமக்குடி வரும் அனைவருக்கும் உரிய வாகன வசதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அரசும் போலீசாரும் முன் கூட்டியே திட்டமிட்டு நெறிப்படுத்திட வேண்டும்.தேவேந்திரர்களை தனி இனமாக அறிவிக்க வேண்டும். தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும். தென்காசி ரயில்வே மேம்பாலத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலம் பெயர் சூட்டப்பட வேண்டும். நெல்லை-தென்காசி ரயில் சேவையை உடனடியாக துவக்க வேண்டும். இக்கோரிக்கைகளை செப்.11க்குள் அரசு நிறைவேற்றாவிட்டால் மள்ளர் நாடு ஜனநாயக போராட்டங்களை நடத்தும்'' என மள்ளர் நாடு நிறுவன தலைவர் சுப.அண்ணாமலை கூறினார்.பேட்டியின் போது மாநில பொது செயலாளர் சோலை பழனிவேல்ராஜன், மாநில பொருளாளர் தண்டாயுதபாணி, நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் சந்திரன், மாவட்ட தலைவர் சுப்பையா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், தென்காசி ஒன்றிய செயலாளர் மாரியப்பன் உடனிருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக