மதுரையில்
அம்பேத்கார், இமானுவேல் சேகரன் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து
திருப்புல்லாணி வட்டார கிராமங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.
இந்தநிலையில்
அந்த சுவரொட்டிகளை அவமதித்து வாசகங்கள் எழுதப்பட்டதால் அந்த பகுதி
மக்களிடையே பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளபச்சேரி கிராம
தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கிராம தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில்
ஊராட்சி தலைவர்கள் புல்லாணி, தி.மு.க.துணை செயலாளர் ஆனந்தன், புதிய தமிழகம்
கட்சி மாடசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில்
திருப்புல்லாணி, யூனியனுக்கு உட்பட்ட சின்னமாயாகுளம், வள்ளிமாடன்வலசை,
வீரன்வலசை, பொக்காரனேந்தல், மல்லல், பனையடியேந்தல், ஆனைகுடி, குளபதம்,
களரி, ஆலங்குளம் உள்பட 30 கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
அதில் கிராம தலைவர் ராஜேந்திரன், ஊராட்சிதலைவர் புல்லாணி ஆகியோர் கூறியதாவது:-
சுதந்திரம்
அடைந்து 67 ஆண்டுகளுக்கு பின்னரும் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்துவது,
அவமரியாதை செய்வது போன்ற விரும்பதகாத நிகழச்சிகள் தொடர்ந்து நடந்து வருவது
வேதனை அளிக்கிறது.
இந்த செயலில் ஈடுபட்டவர்களை
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு தண்டிக்க வேண்டும்.
சுவரொட்டிகளை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய வேண்டும். இந்த செயலை
கண்டித்து வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ள சுதந்திரதினவிழாவை புறக்கணிப்பது
என்றும், 30 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கறுப்புகொடி ஏற்றி
கண்டனம் தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக