ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 10 ஜனவரி, 2014

மாவீரன் பசுபதி பாண்டியனின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!


மறைந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் மாவீரன் பசுபதி பாண்டியனின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தூத்துக்குடியில் அனுசரிக்கப்பட்டது.
 
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் மாவீரன் பசுபதி பாண்டியன் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி திண்டுக்கல்லில் வைத்து கொலை செய்யப்பட்டார். அவருடைய இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் நடந்தது. இதையடுத்து முதலாம் ஆண்டு நிகழ்ச்சி கடந்த ஆண்டு அனுசரிக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் அவரது நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் மள்ளர் கழக தலைவர் சுப.அண்ணாமலை, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட அரசியல் கட்சி மற்றும் தேவேந்திர குல பிரமுகர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு மாவீரன்  பசுபதி பாண்டியன் சமாதிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மாவீரன்  பசுபதி பாண்டியனின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி நகர பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தூத்துக்குடியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், வாகனங்கள் அனைத்தையும் ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் மாவீரன் பசுபதி பாண்டியனின் நினைவு தினம் முடிந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக