ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 10 ஜனவரி, 2014

தென்காசி தொகுதி - ஒரு பார்வை.



தென்காசி - ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில்,வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி என்ற ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி பதினோரு லட்சத்திற்கும் மேலான வாக்காளர்களை கொண்ட பெரும் தொகுதியாகும். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வாசுதேவநல்லூர்  
சங்கரன்கோவில் என்பன தனி தொகுதிகள்.

தென்காசி தொகுதியானது தி.மு.க நேரடியாக வெற்றிபெற இயலாத இதுவரை தி.மு.க வேட்பாளர்கள் நேரடியாக களம் காணாத ஒரு சிறப்பு வாய்ந்த தொகுதி.

தென்காசி தொகுதி உருவாக்கப்பட்டு இதுவரை நடந்துள்ள 14 பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து பத்து முறை காங்கிரசே வெற்றி கண்டுள்ளது இரு முறை அ.தி.மு.க வும் மற்ற இருமுறை கம்யுனிஸ்ட்டும் வெற்றிகண்டுள்ளது மேலும் முன்னால் அமைச்சர் அருணாச்சல தேவேந்திரர் இருக்கும் வரை காங்கிரசிடம் இருந்து தட்டி பறிக்கமுடியாத தனித்துவம் வாய்ந்த காங்கிரசின் கோட்டை எனவும் தி.மு.க வெற்றி பெற இயலாத தொகுதி என்கிற சிறப்பும் தென்காசிக்கு உண்டு.

மேலும் தி.மு.க ஆதரவு கூட்டணி கட்சி வேட்பாளர்கலும் பெரும்பாலும் தோல்வியை தான் தழுவியுள்ளதாய் கடந்த கால தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

தி.மு.க வின் வெற்றி என்பது கனவாகவே தொடருவதால் தான் பெரும்பாலும் தென்காசி தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிடுகிறது தி.மு.க அந்த வகையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேவேந்திரர்களின் அரசியல் அடையாளமாய் கருதப்படும் புதிய தமிழகதிற்கு ஒதுக்கும் வாய்ப்பே அதிகம் இருப்பதை கணிக்கப்பட்டிருக்கிறது.

தென்காசி தொகுதிக்கு தி.மு.க வுடன் டாக்டர் கிருஷ்ணசாமி என்பது கூடுதல் பலம் தான் ஆனால் மூன்று லட்சத்தி ஐம்பதாயிரத்திற்க்கும் மேலான தொகுதியின் பெரும்பான்மை சமூகமான தேவேந்திரர்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறுவதில் தான் டாக்டரின் வெற்றி அடங்கி இருக்கிறது. ஆனால் அத்தொகுதியின் 50% ற்கும் மேலான தேவேந்திரர்கள் இதுநாள் வரை டாக்டர் கிருஷ்ணசாமி யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து நின்றபோது வாகளிக்கவில்லை என்பதையே கடந்த கால புள்ளி விபரங்கள் காண்பிக்கிறது.

டாக்டர் போட்டியிட்டபோது பெற்ற ஓட்டுகள் விபரம்: -

1999ல் டாக்டர் கிருஷ்ணசாமி முதன் முதலாக தென்காசி தொகுதியில் புதிய தமிழகத்தின் சார்பாக போட்டியிட்ட போது பெற்ற ஓட்டுகள் 1,86,220.

இரண்டாம் முறையாக 2004ல் டாக்டர் ஜனதாதல் JD(U) ல் போட்டியிட்ட போது பெற்ற ஓட்டுகள் 1,01,122

மூன்றாம் முறையாக புதியதமிழகத்தின் சார்பாக போட்டியிட்டபோது பெற்ற ஓட்டுகள் 1,16, 685.

ஆதலால் தன்னின் இயல்பான குணமான பிரித்தாளும் தன்மையை மாற்றி எம் தேவேந்திர சமூக சொந்தங்களை தி.மு.க கட்சி ஓட்டுடன் இணைத்து வெற்றி காண்பதும்? இல்லை கடந்த கால தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை போல் வீழ்ந்து போவதும்? டாகடர் கிருஷ்ணசாமி தேவேந்திர குல மக்களின் ஓட்டுகளை ஒருங்கினைப்பதிலேயே அடங்கி இருக்கிறது.

தேர்தல் என்றால் ஆதரவு நிலை எதிர்ப்பு நிலை என்று இருக்கத்தான் செய்யும் தன்னின் தனித்துவமான பிரச்சார யுக்தியால் கள் போன்ற மனம் கொடோரையும் கரைக்க முடியும் மாற்ற முடியும். டாக்டர் கிருஷ்ணசாமி ,வெற்றி காண வேண்டும் என்பதே அணைத்து தேவேந்திரர்களின் எதிர்பார்ப்பும் பொறுத்திருந்து பார்போம்.



வேண்டுகோள் 1: தேவேந்திரர்கலாகிய நாம் அரசியல் அதிகாரத்தை வென்றாக வேண்டும் அதற்கு நாம் ஒன்றாக வேண்டும்.

கரம் இணைப்போம்! கதை முடிப்போம்!! வெற்றி எமதாகட்டும்!!!

சமூக பணியில் ..
பி.எஸ்.ஆர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக