இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கட்சியின் மாநில செயற்குழு,
பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 9 ம் தேதி (வியாழக்கிழமை) தஞ்சையில் வைத்து நடைபெறுகிறது. மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் கட்சியின் நிலைபாடு, கூட்டணி அமைப்பது குறி்த்து முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் குரூப் 1 தேர்வில் வயது வரம்பு சலுகை குறித்த மாணவர்களின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு்ள்ளது. குரூப் 1 தேர்வில் பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 30 ஆகவும், பிற அனைத்து பிரிவினருக்கும் 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு எழுதுவோரில் 50 சதவிகிதத்தினர் கிராமப்புற மாணவர்கள். குரூப் 1 தேர்வு ஆண்டுதோறும் நடத்துவதில்லை.
கடந்த 13 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. கேரளா, ஆந்திரா, குஜராத், அரியானா, பீகார் போன்ற மாநிலங்களில் குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு 45 ஆக உள்ளது. ஆகவே தமிழகத்திலும் குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும்.
ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் பின்பற்ற வேண்டும். இடஒதுக்கீடு முறை ஒவ்வொரு பணி நியமனத்திலும் உறுதி செய்யவேண்டும். மான்யம் இல்லாத சமையல் எரிவாயு, பெட்ரோல், டீஸல் விலை உயர்வினால் ஏழை நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மத்திய அரசு இதனை திரும்ப பெற வேண்டும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக