ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 13 ஜனவரி, 2014

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது தஞ்சையில் ஜான்பாண்டியன் பேட்டி..

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக பொதுக்குழு தஞ்சை மாவட்டம் காவேரி கல்யாண மண்டபத்தில் தலைவர் தமிழினவேந்தர் தலைமையில் நடந்தது. போதுக்குழு மேடையில் பசுமைப்போராளி இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு தமிழினவேந்தர் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு பொதுக்குழு தொடங்கியது.பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகள் நேரடியாக தெரிவிக்க முதலில் வாய்ப்பு வழங்கப்பட்டது. குழு விவாத அடிப்படையிலும் கருத்துகள் பெறப்பட்டன. ஒட்டுமொத்த ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வகையில் வரும் நாடாளுமன்றத் தோர்தல் கூட்டணி அமைப்பது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது . நிறைவாக பரமக்குடி துப்பாக்கி சூடு குறித்து சம்பத் கமிசன் அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் . சி.பி.ஐ விசரணை வேண்டும். மீத்தேன் அனுமதியை ரத்துசெய்யவேண்டும். பாராளுமன்ற கூட்டணிகுறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழினவேந்தருக்கு வழங்குவது. ஆசிரியர் தேர்வு,நீதிபதிகள் தேர்வு, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பணியாளர் நியமனம் உள்ளிட்ட அனைத்திலும் இடஒதுக்கீடு முறையாக பின்பற்ற அரசை வலியுறுத்துவது.குருப் 1 தேர்வில் வயது வரம்பை உயர்த்த கோருவது.கூடங்குளம் மக்கள் மீதான வழக்கை திரும்பபெற அரசை வலியுறுத்துவது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தனித்தோ, கூட்டணிளில் இடம்பெற்றோ தேர்தலை கண்டிப்பாக சந்திப்பது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப பட்டன. நிறைவாக தமிழினவேந்தர் உரையாற்றுகையில். பாராளுமன்றத் தேர்தல் குறித்து முடிவெடுக்க அதிகாரம் தந்த பொதுக்குழுவிற்கு நன்றி தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலில் முன்வைக்க நமது முன்னால் பல பிரச்சனைகளும் அது சார்ந்த கொரிக்கைகளும் உள்ளன என்றார்.தனது தேர்தல் கூட்டணி குறித்த முடிவு தமிழர் உயிரை, உரிமையை, உலகெங்கும் பாதுகாக்கும் கொள்கையை அடிப்படையாக கொணடதாக இருக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக