ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 1 ஜனவரி, 2014

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு புதிய தமிழகம் ஆதரவு.........

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு புதிய தமிழகம் ஆதரவு

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ½ மணி நேரம் நீடித்தது. 

இந்த சந்திப்பின்போது, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார். பின்னர், வெளியே வந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- 

கேள்வி:-தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்ததன் நோக்கம் என்ன?. 

பதில்:- ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரை வந்து சந்தித்தேன். கடந்த 15 ஆண்டுகளாக அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறேன். அந்த வகையில் இன்றும் சந்தித்தேன். 

கேள்வி:-பாராளுமன்ற தேர்தல் குறித்து எதுவும் பேசினீர்களா?. 

பதில்:-தற்போதைய நாட்டின் நிலைமை, தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து அவருடன் பேசினேன். 

கேள்வி:-பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா?. 

பதில்:-ஆமாம். தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம். எம்.பி.யாக கவிஞர் கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், ஏற்காடு இடைத்தேர்தலிலும் தி.மு.க. வுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியை அமைக்க முயற்சி மேற்கொண்டுவருகிறோம்.

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். 

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி, 3 ஆண்டுகள் இடைவெளியில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தாவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக