ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 4 நவம்பர், 2011

பரமக்குடி படுகொலைகளை கண்டித்து போராட்டம்!



ரமக்குடியில் நடைபெற்ற தலித் இனப்படுகொலைகளை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நிகழ்ந்த அந்த அறப்போரில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தோழர்.விடுதலை இராசேந்திரன், தோழர்.ரவிக்குமார், முகமது யூசுப் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆளூர் ஷாநவாஸ் 'இலங்கையில் ராஜபக்சே நடத்தியது போல பரமக்குடியில் ஜெயலலிதாவும் இனப்படுகொலை நடத்தியுள்ளார்; இலங்கையில் விழும் பிணங்களுக்காக இங்கே அழுபவர்கள் இங்கே விழுந்த பிணங்களுக்காக குரல் கொடுக்காமல் அமைதி காக்கிறார்கள்; தலித்துகள் பாதிக்கப்பட்டால் தலித்துகள் தான் பேச வேண்டும் என்ற அவலம் தமிழகத்தில் தொடர்கிறது; இங்குள்ள தமிழ்த் தேசியவாதிகளின் கண்களுக்கு பரமக்குடியில் கொலையானவர்கள் தமிழர்களாகத் தெரிவதில்லை' என்று கண்டன உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக