திருச்சி: அதிமுக அமைத்த கூட்டணி இப்போதும் இருக்கிறதா, இல்லையா என்பதை முதல்வர் ஜெயலலிதா தெளிவுபடுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான குழு அமைப்பது குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்திய அவர் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
மக்கள் நல பணியாளர்களை நியமித்தது திமுக அரசு. அவர்களை தூக்கியது அதிமுக அரசு. இந்த விஷயசத்தில் திமுக அரசும் தவறு செய்துவிட்டது. கடந்த ஆட்சியிலேயே அவர்களை நிரந்தரம் செய்திருக்கலாம்.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் புதிய தமிழகம் நிச்சயமாக போட்டியிடும்.
பரமக்குடி கலவரத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை கோரியும் ஆதிதிராவிட நலத்துறை என்பதை பட்டியல் துறையினர் என்று மாற்றக் கோரியும் டிசம்பர் 6ம் தேதி சென்னை மெமோரியல் ஹாலில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தவுள்ளோம் என்றார்.
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி நீடிக்கிறதா என்று கேட்டதற்கு, உள்ளாட்சி தேர்தலிலேயே அதிமுகவிலிருந்து வெளியேறிவிட்டோம். ஆனால், அதிமுக அமைத்த கூட்டணி இப்போதும் இருக்கிறதா, இல்லையா என்பதை முதல்வர் ஜெயலலிதா தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக