ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 2 நவம்பர், 2011

குற்றச்சாட்டுக்குள்ளான போலீசாரை மாற்றுவதில் என்ன தவறு?: ஐகோர்ட்

மதுரை : பரமக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக குற்றச்சாட்டுகளுக்குள்ளான
போலீஸ் அதிகாரிகளை மாற்றுவதில் தவறு என்ன? என அரசு தரப்புக்கு மதுரை
ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியது.பரமக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை
சி.பி.ஐ., விசாரிக்கவும், பலியானவர்களுக்கு அதிக இழப்பீடு கோரியும் வக்கீல்
முருகன் உட்பட மூவர் தனித்தனி வழக்குகளை தொடர்ந்தனர். வழக்குகள்
நீதிபதிகள் கே.என்.பாட்ஷா, எம்.வேணுகோபால் முன் விசாரணைக்கு வந்தன.
மனுதாரர் வக்கீல்கள் ரத்தினம், வெங்கடேஷ் வாதிடுகையில், ""துப்பாக்கி சூடு
சம்பவம் தொடர்பாக பார்த்திபனூரில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் ராஜாமணி,
எஸ்.ஐ., கருப்பையா மற்றும் ஏட்டுக்கள், தாழ்த்தப்பட்டவர்களை தொந்தரவு
செய்கின்றனர். அவர்கள் வேறு பிரிவினர். அவர்களை மாற்ற வேண்டும்,'' என்றனர்.
இதுகுறித்து ஏற்கனவே மனுவும் செய்தனர்.குற்றச்சாட்டுக்குள்ளான போலீசாரை
மாற்றுவதில் தவறு என்ன? என நீதிபதிகள் அரசு வக்கீல் குமாரிடம் கேள்வி
எழுப்பினர். இதுகுறித்து சிறப்பு பிளீடர் ஆஜராகயிருப்பதால், தள்ளிவைக்க
வேண்டும் என அரசு வக்கீல் தெரிவித்தார். அதை ஏற்று, விசாரணையை நவ., 2க்கு
நீதிபதிகள் தள்ளிவைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக