ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 14 டிசம்பர், 2011

ஏழு பேரைக் கொன்றவர்களைவிடவா நான் ஜாதி வெறியன்? ஜான் பாண்டியன்..



'பரரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்​பவம் சந்தேகம்
இல்லாமல் போலீஸார் நடத்திய படுகொலைதான்’ என்று உறுதி செய்துள்ளது மக்கள்
கண்​காணிப்பகம் வெளியிட்டுள்ள பொதுப் புலன் விசாரணை அறிக்கை! 
20 தலித் அமைப்புகள்கொண்ட பரமக்குடி துப்பாக்கிச்சூடு எதிர்ப்பு
நடவடிக்​கைக் குழு சார்பில், சென்னை லயோலா கல்லூரியில் நடந்த கூட்டத்தில்
இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.சுரேஷ் தலைமையில்,
வழக்​கறிஞர் சுதா ராமலிங்கம், கல்வி​யாளர் வசந்திதேவி, தியாகு, எழுத்தாளர்
பொன்​னீலன், பேராசிரியர் கல்யாணி உட்பட 15 பேர் அடங்கிய குழு, பொதுப்
புலன்​விசாரணையை நடத்தி இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. நிகழ்ச்சியில்
பேசியவர்கள் அத்தனைப் பேரின் பேச்சிலும் காட்டம். முக்கியமாக, இந்தக்
கூட்டத்தில் கட்சி வேறுபாடு, கூட்டணி முரண்பாடு அனைத்தையும் கடந்து
அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒரே மேடையில் நின்று குரல் கொடுத்தார்கள்.
தி.மு.க., ம.தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட்,
விடுதலைச் சிறுத்தைகள், தலித் இயக்கங்கள், தமிழ்த் தேசிய அமைப்புகள் ஆகியவை
ஒன்றாக இந்த மேடையில் பங்கேற்றன. கூட்டத்தில் பேசியவர்களின் சில
கருத்துக்கள் மட்டும் இங்கே...

முன்னாள் துணை வேந்தர் வசந்திதேவி: ''தலித்துகளின் எழுச்சியைத் தாங்க முடியாத ஆதிக்க சாதிகள் செய்த சதிதான் பரமக்குடி துப்பாக்கிச்சூடு.''
தியாகு:  ''ஜாலியன் வாலாபாக், கீழ்வெண்மணிச்
சம்பவங்​களுக்கு இணையான கொடூரம் பரமக்குடிப் படுகொலைகள். இந்த அறிக்கை
இதயத்தில் கசியும் ரத்தத்தால் எழுதப்பட்ட அறிக்கை...''  
வி.பி.துரைசாமி (தி.மு.க.):  ''11/9 அமெரிக்காவில்
இரட்​​டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட சம்பவம் போல... 11/9 மும்பை தாக்குதல்
போல... 11/9 என்பது தலித் மக்களுக்கு மறக்க முடியாத ஒரு தேதி!''
நல்லகண்ணு:  ''சாலைமறியல் செய்தவர்கள், ஒரு பெண்
காவலரிடம் அத்துமீறியதால், துப்பாக்கிச்​சூடு நடத்தவேண்டி இருந்தது என்று
அரசு பொய் சொல்கிறது. வாச்சாத்தியில் அடித்தார்கள். திருக்கோவிலூரிலும்
அடித்தார்கள். குட்டக் குட்டக் குனிந்தால், இவை தொடர்கதையாகி விடும்!''
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): ''ஒரு மாநில முதல்வர்
பொறுப்பு இல்லாமல் மாணவன் பழனிக்​குமார் கொலை செய்யப்பட்டதை
நியாயப்படுத்தி சட்டமன்றத்தில் பேசியது மோசடியானது. அவர் அமைத்துள்ள
நீதிபதி சம்பத் கமிஷனை மக்கள் யாரும் ஏற்க மாட்டார்கள்!''
ஜான் பாண்டியன்: ''பரமக்குடியிலேயே ஜெயித்து​விட்டோம்
என்று ஆளும் கட்சிக்குப் பெருமை. நீங்கள் எப்படி ஜெயித்தீர்கள் என்று
எனக்குத் தெரியும். அங்கு பதிவான ஓட்டுகளே 7,000தான். ஆனால், 10,000 ஓட்டு
வாங்கி ஜெயித்தார்களாம். இதில் இருந்தே தெரியவில்லையா தில்லுமுல்லு. நான்
என்ன தவறு செய்தேன்? அடித்தால் திருப்பி அடிக்கச் சொல்வது தவறா? நான் சாதி
வெறியன் என்கிறார்கள். பரமக்குடியில் ஏழு பேரைக் கொன்றவர்களைவிடவா நான்
சாதி வெறியன்? எம் மக்கள் அன்று நிராயுதபாணிகளாக இருந்தார்கள். அவர்களிடம்
ஆயுதம் இருந்திருந்தால், நீங்கள் என்னவாகி இருப்பீர்கள்?''  
தொல்.திருமாவளவன்: ''தலித் தலைவர்கள் ஒரு தலித்துக்கு
உதவி செய்யப் போனால், கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் என்று முத்திரை
குத்துகிறார்கள். 234 தொகுதிகளிலும் ஓட்டு இருந்தாலும் திராவிடக் கட்சிகள்,
தலித் கட்சிகளுக்குப் 10 இடங்களுக்கு மேல் கொடுக்க மாட்டார்கள். அப்படிக்
கொடுத்தால், ஆதிக்க சாதியினர் கோபித்துக்கொள்வார்களோ என்று பயம்!''
வைகோ:  ''அடக்கிவைக்கப்பட்ட கோபம் இப்படித்தான்
எரிமலையாய்ச் சீறும். இழப்பின் வலியில் இருந்தும் இப்படித்தான் பேச
முடியும். பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்துக் கேள்விப்பட்டவுடன் மதுரை
மருத்து​வமனைக்கு விரைந்தேன். அங்கே பார்த்த காட்சிகளை உயிருள்ள வரை மறக்க
முடியாது. கால்களில் குண்டடிபட்டவரை நிற்கவைத்து இருந்தார்கள். படுக்கை
வசதிகூட இல்லை. அவர்களைக் காண உறவினர்களுக்கும் அனுமதி இல்லை. இந்த
விஷயத்தில் போலீஸ்தான் கொலைகாரர்கள். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு
கொலைக்கான தண்டனையையும் அனுபவிக்க வேண்டும்!''
- இத்தனை தலைவர்களின் பேச்சுக்களையும் தாண்டி வலியை ஏற்படுத்தியது,
இறந்து போன ஏழு பேரின் படங்களைப் பார்த்துக் கண்ணீருடன் கதறிய அவர்களின்
குடும்ப உறுப்பினர்களின் அழுகுரல்!

D

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக