ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 21 டிசம்பர், 2011

கேரள நடிகர்களே வெளியேறுங்கள் - ஜான் பாண்டியன் எச்சரிக்கை.! அணைத்து அரசியல்வாதிகளையும் தூக்கி சாப்பிட்ட ஜான் பாண்டியன்..?!

தமிழகத்தில் பிழைப்பு நடத்தும் கேரள நடிகர், நடிகைகள் உடனே வெளியேற வேண்டும், என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன் எச்சரிக்கை விடுத்ததாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. ( இந்த செய்தியின் அடிப்படையில் நாமும் செய்திகளை சொல்லுவோம்.) சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத கேரள அரசை கண்டித்து, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், தேனியில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட ஜான் பாண்டியன் கூறியவை, கேரளாவிற்கு செல்லும் சுமார் 13 வழிகளை மூட வேண்டும். ( இந்த 13 வழிகளில் லாரி, பேரூந்து செல்லும் வழிகள் ஐந்தோ, ஆறோ தான், மற்ற ரோடுகள் எல்லாம் மாட்டுவண்டி செல்லும் பாதைகள் தான்.)


பால்,இறைச்சி, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை கொண்டு செல்ல நிரந்தர தடை விதிக்க வேண்டும். ( நிரந்தர தடையை யார் விதிப்பது..? தமிழக மக்களா..? தமிழக அரசா..? இந்திய அரசா..? இவ்வாறு பொத்தாம் பொதுவில் கூறிவிட்டால் சரியாகப் போகிறது. யார் எதிர் கேள்வி கேட்கப் போகிறார்கள் என்று கூட இருக்கலாமோ.?) காவிரி தண்ணீருக்காக தமிழர்களை கர்நாடகத்தினர் அடிக்கின்றனர். தற்போது முல்லை பெரியாறு தண்ணீருக்காக தமிழர்கள் அடி வாங்குகின்றனர். இனி ஆந்திராவினரும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி தமிழர்களை அடிப்பார்கள். இப்படி அடி வாங்கி கொண்டே தமிழர்கள் இருப்பார்கள்.





தமிழகத்தில் பிழைப்பு நடத்தும் கேரள நடிகர், நடிகைகள் உடனே வெளியேற வேண்டும். இங்கு வியாபாரம் செய்யும் மலையாளிகள் தங்களது நிறுவனங்களை மூட வேண்டும்.பொய் பிரச்சாரம் செய்ய கேரள மீடியாக்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசு சட்டசபையில் கொண்டு வந்த எட்டு தீர்மானங்களால் எவ்வித பயனும் இல்லை. அதற்கு பதிலாக அணையை பாதுகாக்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லை பெரியாறு அணையை மீட்கும் வரை, இடுக்கியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும். அணையில் 142 அடி நீர் தேக்க வேண்டும். அணையில் மத்திய பாதுகாப்புப் படையை நிறுத்தும் வரை கடுமையான போராட்டம் தொடரும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக