ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 26 டிசம்பர், 2011

விழித்துக் கொண்டார் ஜெ விரட்டப்பட்டார் சசிகலா


உடன் பிறவாச் சகோதரி சசிகலா உட்பட 14 பேரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் ஜெயலலிதா இப்படி ஒரு அதிர்ச்சியைக் கொடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதாவின் நிழல் போல கடந்த 20 வருடங்களாகச் செயற்பட்டு வந்த சசிகலாவுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.
அரசியல் தலைவர்களினால் சம்பாதித்த நல்ல பெயரை அவர்களது வாரிசுகள் சந்தி சிரிக்க வைப்பதே வழøயான சம்பவம் ஆனால் ஜெயலலிதாவின் வாழ்வில் இது நேர்மாறாக நடந்துள்ளது. சசிகலாவும் அவரது பரிவாரங்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் போயஸ் கார்டனிலும் ஆடிய ஆட்டத்தால் பொசுங்கிப்போன எம்.ஜி.ஆர். விசுவாசிகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேறி இன்னொரு அரசியல் கட்சியில் சேர்ந்தனர். இன்னும் சிலர் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அழகிரியின் பெயர்தான் அதிகம் அடிபட்டது. அழகிரியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று மக்கள் குமுறினார்கள். நான் முதல்வரானதும் அழகிரியிடமிருந்து மதுரையை மீட்பேன் என்று ஜெயலலிதா சபதமிட்டார். அழகிரியின் கட்டுப்பாட்டில் இருந்து மதுரையை மீட்டார். கருணாநிதியால் செய்ய முடியாததை ஜெயலலிதா செய்து காட்டினார். அழகிரியைக் கருணாநிதி அடக்கி வைத்திருந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் நேரான பாதையில் சென்றிருக்கும்.
ஸ்டாலின், அழகிரி, கருணாநிதி அபிமானிகள் என திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்துள்ளது. அன்புமணியின் பின்னால் நிற்பவர்கள் தவிர பாட்டாளி மக்கள் கட்சியில் நீடிக்கமுடியும். தமிழக காங்கிரஸில் எத்தனை கோஷ்டி இருக்கிறöதன்று தலைவி சோனியாவுக்கே தெரியாது. மாவட்டம் தோறும் கோஷ்டிகள் உண்டு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஜெயலலிதாவின் விசுவாசிகள் மட்டுமே நீடிக்கலாம். அதுவும் எத்தனை நாட்கள் என்று சரியாக கணிப்பிடற முடியாது. புதிய பதவிக்கு ஒருவரை ஜெயலலிதா நியமிப்பார். அடுத்த நொடியே அவர் தூக்கி எறியப்படுவார். எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் வெளியேற்றப்பட்டார்கள். சசிகலாவின் வட்டத்துக்குள் இருப்பவர்கள் மட்டும் பதவியில் நீடித்தார்கள். இந்த உண்மை ஜெயலலிதாவுக்குத் தெரியவந்ததும் சசிகலா உட்பட 14 பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
கட்சித் தலைவர் அவரின் பிள்ளைகள் இரண்டாம் கட்டத் தலைவரின் பிள்ளைகள், மாவட்ட செயலாளர்களின் வாரிசுகள் இவர்களின் உறவினர்கள் ஆகியோரின் ஆதிக்கமே அரசியல் கட்சிகளுக்குள் உள்ளன. ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இந்தத் தொல்லைகள் இல்லை. சசிகலாவின் கையே அங்கு மேலோங்கி இருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் அதிகமானோர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமோகமாக வெற்றி பெற்றதற்கு வேட்பாளர்கள் முக்கிய காரணமல்ல. திராவிட முன்னேற்றக் கழகம் செய்த மாபெரும் தவறினாலேதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றது.


சசிகலாவையும் அவருடைய உறவினர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றியதற்கான உண்மையான காரணத்தை ஜெயலலிதா வெளியிடவில்லை. பெங்களூரில் நடைபெறும் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியானால் யாரை முதல்வராக்குவது, உளவுத்துறையின் அறிக்கைகள் ஜெயலலிதாவின் பார்வைக்கு நேரடியாக சமர்பிக்கப்படுவதில்லை. சசிகலா பார்வையிட்டு கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் பாதகமான அறிக்கைகள் கிடப்பில் போடப்படுகின்றன. சசிகலாவுக்கு நெருக்கமானவர்களின் தவறுகள் ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பப்படுவதில்லை போன்ற காரணங்களினால் சசிகலா விரட்டப்பட்ட செய்திகள் உலா வருகின்றன.
மக்கள் எதிர்பார்க்கும் நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஜெயலலிதா தயாராக இருந்ததாகவும் சசிகலா அதற்கு தடையாக இருந்தார். அத்துடன் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியாது அதிகாரிகள் தவித்தனர். பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதுபோல இது பற்றி ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு வந்தது யார் என்ற கேள்விக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சோ, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆகிய இருவரின் பெயர் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதாவின் பிரசாரங்களை வீடியோவாகத் தயாரிப்பதற்காக அன்றை ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மூலம் அறிமுகமானவர் சசிகலா. அவருடைய நிறுவனம் ஜெயலலிதா பிரபல்யமாவதற்கு உதவியது. அந்த நன்றிக் கடனுக்காக தன் அருகிலே சசிகலாவை வைத்து அழகுபார்த்தார் ஜெயலலிதா. அதிக நெருக்கமும் அளவுக்கு மீறிய அதிகாரத் துஷ்பிரயோகமும் அன்புச் சகோதரி ஜெயலலிதாவிடமிருந்து சசிகலாவைப் பிரித்துவிட்டது.
சசிகலா, சசிகலாவின் கணவர் எம். நடராஜும், நடராஜனின் தம்பி எம். ராமச்சந்திரன், சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ், சசிகலாவின் இரண்டாவது அண்ணன் மகன்கள் டிவி.மகாதேவன், தங்கமணில, சசிகலாவின் அக்காவின் மகன் டி.டி.வி. தினகரன், அவருடைய தம்பி சுதாகரன் இவரையே தனது தத்துப் பிள்ளையென ஜெயலலிதா அறிவித்தார். நடராஜனின் தம்பியின் மகன் கணக குலோதுங்கன், ராஜராஜன், சசிகலாவின் தம்பி திவாகழரன், சசிகலாவின் சித்தப்பாவின் மருமகன் ராவணர் ஆகியோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஆவர்.
சசிகலாவுடனும் ஏனைய பதின்மூன்று பேருடனும் நெருங்கிய தொடர்புடையவர்களை பற்றிய அறிக்கையை தயாரிதக்கப்படுகிறது. அவர்களின் செல்வாக்கினால் அமைச்சர்களானவர்கள் நீக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஜெயா ரி.வி. யிலும் சசிகலா குழுவின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. டி.வி.டி. தினகரனின் மனைவி அனுராதாதான் ஜெயா ரி.வி. யின் நிர்வாகப் பொறுப்பாளராக இருக்கிறார். சன் ரீ.வி. கலைஞர் ரீ.வி. ஆகியவற்றுக்குப் போட்டியாகாத? நிலையில் முடங்கிப் போயுள்ளது ஜெயா ரீ.வி. ஆகையினால் ஜெயா ரீ.வி. யிலும் அதிரடி மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் சில புலனாய்வுப் பத்திரிகைகள் சசிகலாவைப் பற்றிய தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தன. அவற்றைப் படித்திருந்தால் இப்படிப்பட்ட நடவடிக்கையை ஜெயலலிதா முன்னதாகவே செய்திருப்பார். 1991 ஆம் ஆண்டு தன் உடன் பிறவாச் சகோதரி சசிகலாவை விரட்டினார் ஜெயலலிதா. மூன்று மாதங்களில் மீண்டும் பூரண கும்பம்? வைத்து சசிகலாவை வரவேற்றார். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்பது ஜெயலலிதாவின் பொன்மொழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக