சட்டசபை கூட்டத்தை நேற்று மனிதநேய மக்கள் கட்சியும், புதிய தமிழகமும்
புறக்கணித்தது. புறக்கணிப்பு தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம்
தொகுதி உறுப்பினர் ஜவஹிருல்லா சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம்
கூறும்போது, ‘சட்டசபையில் பொதுமக்கள் பிரச்சினைகளை பற்றி பேச போதிய கால
அவகாசம் தருவதில்லை. முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு பிரச்சினை, ஆசிரியர்
தகுதித்தேர்வில் இட ஒதுக்கீடு என பல்வேறு விஷயங்கள் பற்றி முழுமையாக
விவாதிக்க முடியாததால் சட்டமன்ற கூட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி
புறக்கணிக்கிறது’ என்றார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் (ஒட்டப்பிடாரம் தொகுதி) டாக்டர் கிருஷ்ணசாமி கூறும்போது, ‘கவர்னர் உரையின் மீது ஆளுங்கட்சி உறுப்பினர் பேசும்போது, சம்பந்தமில்லாமல் சபையில் இல்லாதவர்களை பற்றி பேசுகிறார். நாங்கள் எதுவும் பேசினால் அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறார்கள். எனவே புதிய தமிழகம் கட்சி இன்றைய கூட்டத்தை புறக்கணிக்கிறது.’ என்றார். கூட்டத்தொடரில் முதல் நாள் மட்டும் பங்கேற்ற தே.மு.தி.க. உறுப்பினர்கள் தொடர்ந்து 3–வது நாளாக நேற்று (கடைசிநாள்) புறக்கணித்தனர்.சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியதுபோன்று, நேற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபைக்கு வரவில்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக