ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 25 மார்ச், 2014

தென்காசியில் முந்துகிறார் கிருஷ்ணசாமி..




புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி தென்காசி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். தென்காசி பாராளுமன்றத் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு 1 லட்சம் வாக்கு களுக்கு மேல் டாக்டர் கிருஷ்ணசாமி பெற்றது குறிப்பிடத்தக்கது.


ஒன்றரை லட்சம் முஸ்லிம் வாக்குகள் நிரம்பியிருக்கும் தென்காசி தொகுதியில் ம.ம.க. வலுவான ஒரு கட்சியாக உள்ளது. தமுமுக வலுவான சமுதாய அமைப்பாகவும், அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஆதரவு பெற்ற அமைப்பாகவும் உள்ளது குறிப்பிடத் தக்கது. டாக்டர் கிருஷ்ணசாமியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தமுமுக, மமக நிர்வாகிகளும் தொண்டர்களும் பம்பர மாக பணியாற்றி வருகின்றனர்.


தென்காசி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் மமக மற்றும் தமுமுகவினர் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை ம.ம.க. மாவட்டச் செயலாளர் பாளை ரபீக், பொருளாளர் செய்யது அலி தலைமையில் தொகுதி முழுவதும் பிரச்சாரப் பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. ஜமாஅத் சந்திப்பு, முக்கியப் பிரமுகர்கள் சந்திப்புகள் நடந்து வருகின்றன. ம.ம.க.வின் நிலைப்பாட்டை ஜமாஅத் தார்களும், சமுதாயப் பிரமுகர்களும் வரவேற்று புதிய தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.



இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லிங்கம் பெரிய அளவில் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர். கூட்டணி பலமாக இருந்தாலும் கடந்த முறை வெற்றி பெற்ற சி.பி.ஐ. வேட்பாளர் அப்பாத்துரை 5 வருடமாக தொகுதியை எட்டிப்பார்க்காததாலும் உருப்படியான பணிகள் ஏதும் செய்யாததாலும் கடுப்பில் இருக்கும் மக்கள் ­ங்கத் துக்கு ஓட்டளிக்க விரும்ப மாட்டார்கள்.


டாக்டர் கிருஷ்ணசாமியைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களின் பெரும் ஆதரவு உள்ளதுடன் ம.ம.க. வினரின் ஆதரவும் சேர்ந்துள்ளதால் வெற்றி பெறுவது நிச்சயம். முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் தமுமுகவின் செயல்பாடுகளால் கவரப் பட்ட நடுநிலை வாக்குகள் கிருஷ்ண சாமியை கரையேற்றி விடும் என்பதே தென்காசியின் தற்போதைய கள நிலவரம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக