ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 22 மார்ச், 2014

தொகுதியில் எனக்கும், பாஜவுக்கும் தான் போட்டி டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு -


தென்காசி 

கடையநல்லூர், : ‘தென்காசி தொகுதியில் புதிய தமிழகத்திற்கும், பாஜவுக்கும் தான் போட்டி உள் ளது. அதிமுக களத்திலேயே இல்லை’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார். 
 நெல்லை மாவட்டம், கடையநல்லூரில் தென்காசி பாராளுமன்ற தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட் பாளர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தென்காசி தொகுதி தேர்தல் பொறுப் பாளர் மைதீன்கான் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ரசாக், முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது முகமது, செயலாளர் அப்துல் லத்தீப், மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சேட்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது: 
தென்காசி தொகுதியை பொறுத்தவரை புதிய தமிழகத்திற்கும், பாஜவிற்கும் தான் போட்டி உள்ளது. அதிமுக களத்திலேயே இல்லை. தென்காசி தொகுதி யில் தங்கச்சுரங்கம் போல் இயற்கை வளம் இருந்த போதும் தகுதியான, திறமை வாய்ந்த எம்.பி.க்கள் அமையாததால் இத்தொகுதி இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. 
இப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் பணிபுரிந்த போதிலும் அவர்களின் நலனுக்காகவும், மறுவாழ்விற்காகவும் எவ்வித ஆக்கபூர்வ மான திட்டமும் செயல்படுத்தப்படாததால் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே வெளிநாடுகளில் பணிபுரிபவர்களின் உரிமை யை பாதுகாக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நான் வெற்றி பெற்றால் இஸ் லாமிய மக்களுக்கு அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார். 
தென்காசியில் நடந்த கூட்டத்திற்கு முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் துராப்ஷா தலைமை வகித்தார். மமக மாவட்ட தலைவர் மைதீன்சேட்கான் முன்னிலை வகித்தார். திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் முகம்மது இஸ்மாயில், தமுமுக மாவட்ட செய லாளர் நயினார்முகம்மது, தங்கவேலு எம்.பி., உட்பட பலர் கலந்து கொண்டனர். 
தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  மாவட்ட செயலாளர் துரைஅரசு தலைமையில் கூட்டம் நடந்தது. புளியங்குடியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்மாவட்ட துணைத் தலைவர் செய்யது பட்டாணி தலைமையில் அறிமுக கூட்டம் நடந்தது. - 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக