ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 14 மார்ச், 2014

தென்காசி தொகுதி வெற்றி நிச்சயம்".


தென்காசி நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும் சரத்குமாரும் இணைந்து போட்டியிட்டதில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தி.மு.க, அ.தி.மு.க இல்லாத ஒரு சுயேட்சை வேட்பாளர் போலவே தன்னைப் பிரகடனப்படுத்தி வேட்பாளராக களம் கண்டார்.

அப்போது அவர் பெற்ற வாக்குகள் ஒரு லட்சத்தி முப்பத்தைந்தாயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

2009 ல் எதிர்த்து நம்முடைய வேட்பாளர் "கை" சின்னத்தில் போட்டியிட்ட வெள்ளைப்பாண்டி கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தோழர் லிங்கம் அவர்களிடம் முப்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

தே.மு.தி.க சார்பில் இன்பராஜ் என்பவர் போட்டியிட்டு தன் பங்குக்கு வாக்குகளை பிரித்தார்.

ஆக, மூன்று பிரபல கட்சிகளுக்கு மத்தியில் சாதாரண சரத்குமாரை வைத்துக் கொண்டு 1,35,000 வாக்குகளை தனித்து நின்று டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய சூழலில் தி.மு.க கூட்டணியின் வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் களம் காணுகின்றார்.

இந்தத் தேர்தலில் தமிழகத்தில் ஐந்து முனைப் போட்டி நிலவும் என்று தெரிவிக்கின்றனர்.

ஒருவேளை ஐந்து முனைப் போட்டி வந்தால், கடந்த தேர்தலில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பெற்ற வாக்குகளும், 6 சட்டமன்ற தொகுதியிலும் உள்ள உதயசூரியனுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும், முஸ்லிம் அமைப்புக்களுக்கும் விழும் வாக்குக்குகள் சிதறாமல் விழுந்தாலே போதும் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வெற்றி பெற்று விடுவார்.

தலைவர் கலைஞரின் கரங்களில் எங்கள் மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்களும், நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் அவர்களும் தென்காசி தொகுதியின் வெற்றிக்கனியை கலைஞரின் காலடிகளில் சமர்ப்பிப்பனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக