ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

144 தடைஉத்தரவு: பணம் விநியோகிக்க சாதகமாகி விட்டது...


தேர்தல் ஆணையம் பிறப்பித்த 144 தடை உத்தரவானது, அதிமுகவினர் பணம் விநியோகம் செய்ததற்கு சாதகமாக அமைந்து விட்டது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி புகார் தெரிவித்தார்.
தென்காசி (தனி) மக்களவைத் தொகுதி வேட்பாளரான கிருஷ்ணசாமி, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி. தமிழகம் மற்றும் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் எங்களது கூட்டணி வெற்றி பெறும். மக்களவைத் தேர்தலில் அதிமுகவினர் தாராளமாக பணம் விநியோகித்தனர். தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை.
தென்காசி தொகுதிக்குள்பட்ட புளியங்குடி நகராட்சித் தலைவரிடமே ரூ.1 கோடி சிக்கியது. தொகுதி முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் விநியோகிக்க வைத்திருந்தனர். இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இது ஆளும்கட்சியினருக்கு ஆதரவாகி, இருவர் இருவராகச் சென்று வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கக் காரணமாக அமைந்து விட்டது. அவற்றைத் தடுக்க 4 பேராகச் சென்றால் தடை உத்தரவு பாயும். வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுப்பதாகக் கூறி வாகனச் சோதனை நடத்தி அப்பாவி வியாபாரிகளிடம் இருந்துதான் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையும் வாக்குப்பதிவுக்கு முந்தைய 4 நாள்களிலும் நடைபெறவில்லை. சோதனைச் சாவடிகளில் எந்த வாகனச் சோதனையும் நடைபெறவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த பாரபட்ச நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைக் கொண்டு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்டப் போராட்டம் குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றார் கிருஷ்ணசாமி. பேட்டியின்போது, திமுக எம்எல்ஏ மைதீன்கான் உடனிருந்தார்.

பணம் பட்டுவாடாவுக்கு உடந்தை தேர்தல் ஆணையத்தின் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கிருஷ்ணசாமி பேட்டி...

நெல்லை: தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி  வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சியின் தலைவருமான கிருஷ்ணசாமி,  நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  ஜனநாயக முறைப்படி தேர்தல் நடப்பதற்கு தேர்தல் ஆணையம் தான்  பொறுப்பு. ஆனால், இந்த தேர்தலில் ஆளுங்கட்சியினர் தேர்தல்  ஆணையத்தின் உதவியுடன் பட்டி தொட்டியெல்லாம் பணப்பட்டுவாடா  செய்தனர். இது 21ம் நூற்றாண்டில் நடந்த ஜனநாயக படுகொலை.  செக்போஸ்ட்கள் அமைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம்  வாகன சோதனை நடத்திய தேர்தல் ஆணையம், தேர்தலுக்கு ஒரு  வாரத்திற்கு முன் அனைத்து செக்போஸ்ட் களையும் அகற்றி விட்டது.  மேலும் 144 தடை உத்தரவு பிறப்பித்து பணப் பட்டுவாடாவுக்கு  உடந்தையாக செயல்பட்டது. 

இதை நாங்கள் சும்மா விடமாட்டோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு  தொடருவோம். பணப் பட்டுவாடாவை வேடிக்கை பார்த்தது மிகப்பெரிய  தண்டனைக்குரிய குற்றம். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து திமுக  தலைவர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து  பேசி முடிவு எடுப்போம். கட்சி சார்பின்றி அனைத்து கட்சி  தலைவர்களின் ஆதரவை கேட்போம். மேலும், தேர்தல்  ஆணையத்திற்கு எதிராக மக்களை திரட்டுவோம்.  144 தடை உத்தரவு  பிறப்பித்தது பணம் பட்டுவாடா செய்ததற்கு தான் என்பது  நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பணப் பட்டுவாடா எங்களது வெற்றி  வாய்ப்பை பாதிக்காது. கூட்டணி பலம் வெற்றியை தேடி தரும்.   இவ்வாறு அவர் கூறினார்.

சங்கரன்கோவில் அருகே தாக்கப்பட்ட புதிய தமிழகம் பிரமுகர் மரணம்..


புதிய தமிழகம் கட்சி தலைவரும், தென்காசி தொகுதி வேட்பாளருமான டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–
தி.மு.க. தலைமையிலான கூட்டணி இயற்கையான வலுவான கூட்டணி. ஜாதி, மதம், மொழி கடந்த கூட்டணி. இதனால் தென்காசி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
ஜனநாயகத்தில் தேர்தல் மிக முக்கியம். அதனை நியாயமாக நடத்துவது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. ஆனால் தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நியாயமாக நடத்தவில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க.வினர் வீடுவீடாக சென்று பண பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர். இதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி வீதம் என தமிழகம் முழுவதும் ரூ.4 ஆயிரம் கோடி பண பட்டுவாடா நடந்துள்ளது.
144 தடை உத்தரவு போட்டு, சோதனை சாவடிகளை எடுத்ததால் பணம் கொடுக்க ஆளும் கட்சியினருக்கு எளிதாகிவிட்டது. 144 தடையால் எதிர்கட்சியினர் கூட்டமாக சென்று தடுக்க முடியாமல் போய்விட்டது. எனவே பண பட்டுவாடா செய்தது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண பலத்தை மீறி கூட்டணி பலத்தால் எங்கள் அணி வெற்றி பெறும். தமிழகத்தில் இது போன்ற பண பலம் தொடர்ந்தால் மக்கள் கிளர்ச்சி ஏற்படும். ஆளுங்கட்சிக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள்வார்கள். தி.மு.க. கூட்டணியில் பணம் விநியோகம் செய்யப்பட்டது என்பது முட்டாள்தனமானது. 
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தென்காசி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ., புதிய தேர்தலில் பண பட்டுவாடா: விசாரணை நடத்த கிருஷ்ணசாமி வலியுறுத்தல்தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர்கள் ஜெயகுமார், செல்லப்பா ஆகியோர் உடனிருந்தனர்.

சனி, 26 ஏப்ரல், 2014

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

நிறுவனர்அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
நடந்து முடிந்த 2014- பாராளுமன்றத் தேர்தலில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் புதிய தமிழகம் கட்சி நிறுவனர்-தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்களுக்கு "தொலைக்காட்சிப்பெட்டி" சின்னத்தில் வாக்களித்த தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் கட்சி சார்ந்த/கட்சி சாராத அனைத்து தரப்பட்ட வாக்காள பெருமக்களுக்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பாகவும், புதிய தமிழகம் கட்சி சார்பாகவும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்...
தேர்தல் நாளுக்கு முன்பாகவே கருத்துக் கணிப்பு நடத்தி தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் டாக்டர் அய்யா அவர்கள் தான் வெற்றி பெறுவார் என்று தமிழகமெங்கும் பறைசாற்றிய நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன், ஏகலைவன் உள்ளிட்ட வார இதழ்களுக்கும், தின மலர், தினகரன், தி இந்து (தமிழ்) உள்ளிட்ட தினசரி இதழ்களுக்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பாகவும், புதிய தமிழகம் கட்சி சார்பாகவும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்...
மேலும் எதிரணி வேட்பாளர்களின் பணபலத்தையும், அரசியல் பலத்தையும், அரசு அதிகாரத்தையும், ஆட்சியாளர்களின் ஆணவத்தையும் உடைத்தெறிந்து, தகர்த்தெறிந்து டாக்டர் அய்யா அவர்கள் இத்தகைய முன்னிலை அடைய அருந்தொண்டாற்றிய
திராவிட முன்னேற்ற கழகம்,
மனிதநேய மக்கள் கட்சி,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக் கழகம்,
எஸ்.டி.பி.ஐ.,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
விடுதலைச் சிறுத்தைகள்,
பெருந்தலைவர் மக்கள் கட்சி,
அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சி,
திராவிடர் கழகம்,
தமிழ்நாடு கட்டட தொழிலாளர் சங்கம்,
உழவர் உழைப்பாளர் கட்சி
உள்ளிட்ட ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் அனைத்து தோழமை கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைப் பொறுப்பாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்...
குறிப்பாக சாதியத்தையும், மத வெறியையும் கருவருத்து வெற்றி ஒன்றே இலக்காக வைத்து இரவு பகல் பாராது, அரைவயிற்று உணவோடு, ஓயாது உறங்காது பாடுபட்ட மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி.ஐ., தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆகிய கட்சிகளின் மாநில நிர்வாகிகள் முதல் மாணவரணி நிர்வாகிகள் வரை உள்ள அனைத்து பொறுப்பாளர்களுக்கும், ஏனைய இஸ்லாமிய சொந்தங்களுக்கும், புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, தொகுதி, நகர மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும், மாணவரணி, மகளிரணி நிர்வாகிகளுக்கும், முன்னாள்-இன்னாள் பொறுப்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

சனி, 19 ஏப்ரல், 2014

செந்தில் மள்ளர் தேனி தொகுதியில் களம் காண்கிறார் .

மள்ளர் மீட்புக் களம் ...... தேர்தல் திணைக் களம் ...... தேனி மாவட்டம் ---பாண்டியர் நாடு..

நெல்லை தொகுதி தேர்தல் களம்:இடம்-மானூர்.

செந்தில் மள்ளர் தேனி தொகுதியில் களம் காண்கிறார் .


தேனி நாடாளுமன்றத் தொகுதியில் தேவேந்திர குலத்தின் சார்பாக போட்டியிடும் மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் கு .செந்தில் மள்ளர் அவர்களுக்கு தேர்தல் பரப்புரைச் செலவுகளுக்கு நிதிஉதவி அளிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கு எண்ணுக்கு அனுப்புமாறு வேண்டுகிறோம் .....
K .SENTHILMALLAR
SB A/C NO;3861101004079.
CANARA BANK,
KODANGIPATTI BRANCH,
IFSC Code; CNRB 0003861.

செந்தில் மள்ளர் தேனி தொகுதியில் களம் காண்கிறார் .

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடும் மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் தமிழ்த்திரு கு .செந்தில் மள்ளர் அவர்களை ஆதரித்து மள்ளர் சமூகத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ள அமெரிக்க கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு மாணவி விக்டோரியா குரூஸ் அவர்கள் உப்புக்கோட்டை ,டொம்புசேரி ,ஏழுகலைப்பட்டி, கரையான்பட்டி ,கொனாம்பட்டி ,எரனம்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, செல்லாயிபுரம் ,தேவாரம் ,டி..மீனாட்சிபுரம் , உள்ளிட்ட ஊர்களில் வாக்கு சேகரிக்கிறார் ... ..ஒவ்வொரு ஊர்களிலும் மள்ளர் குல சொந்தங்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர் .......

செந்தில் மள்ளர் தேனி தொகுதியில் களம் காண்கிறார் .

நெல்லை தி.மு.க வேட்பாளர் தேவதாச சுந்தரத்தை ஆதரித்து (18-04-2014) அன்று டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மானூர் பகுதியில் பிரசாரம் செய்தார்.

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

10 மணிக்கு மேல் வாக்குசேகரித்த கிருஷ்ணசாமி மீது வழக்கு


விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்த புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி புதன்கிழமை இரவு 10 மணிக்கும் மேல் செட்டியார்பட்டி அரசரடி பகுதியில் ஓட்டு கேட்டாராம். இதுதொடர்பாக தேர்தல் பறக்கும்படை அலுவலர் முத்தையா தளவாய்புரம் போலீஸில் புகார் செய்தார்.
டாக்டர் கிருஷ்ணசாமி, தி.மு.க. நிர்வாகிகள் தனுஷ்கோடி, தங்கப்பாண்டியன், புதிய தமிழகம் மாவட்டச் செயலர் ராமராஜ் ஆகியோர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, தளவாய்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி வாக்கு சேகரிப்பு


தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி வாக்கு சேகரித்தார்.
பள்ளிவாசல்
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
நேற்று தென்காசி மரைக்காயர் பள்ளிவாசல் முன்பு மதியம் 2 மணிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கூட்டணி கட்சியினருடன் நின்று கொண்டிருந்தார். முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை முடித்து வெளியே வந்த போது அவர்களில் முக்கிய பிரமுகர்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி சால்வை அணிவித்து தனக்கு ஆதரவு தருமாறு கேட்டு கொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.ரசாக், தி.மு.க. மாவட்ட பொருளாளர் சேஷக் தாவூது, தென்காசி நகர செயலாளர் நடராஜன், துணை செயலாளர் முகம்மது இஸ்மாயில், புதிய தமிழகம் மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார், தென்காசி தொகுதி பொறுப்பாளர் அரவிந்த ராஜா, ஒன்றிய செயலாளர் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்
தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பனவடலிசத்திரம் பகுதியில் பிரசாரம் செய்தார். தேவர்குளத்தில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்கினார்.
வன்னிக்கோனேந்தல், பனவடலிசத்திரம், குருக்கள்பட்டி, சின்னக்கோவிலான்குளம், தர்மத்தூரணி, வென்றிலிங்காபுரம், நடுவக்குறிச்சி, வீரசிகாமணி, சேர்ந்தமரம், அருணாசலபுரம், அரியநாயகிபுரம் ஆகிய ஊர்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தில் புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், இணை செயலாளர் இன்பராஜ், தேர்தல் பொறுப்பாளர் தங்கப்பாண்டியன், செயலாளர் கோவில்துரை, தி.மு.க. செயலாளர் துரைராஜ், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் இசக்கி வளவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வியாழன், 17 ஏப்ரல், 2014

கருணாநிதி அடையாளம் காட்டுபவரே இந்தியாவின் பிரதமர்: சிவா..


தென்காசி தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து தென்காசி சட்டசபை தொகுதி தேர்தல் பணிக்குழு சார்பில் தென்காசி வேன் நிறுத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான் உண்மையான போட்டி. நீங்கள் வாக்குசாவடிக்கு செல்லும் போது ஒரு நொடி சிந்தித்து வாக்களியுங்கள். உங்களது முடிவு தவறான முடிவு என்றால் 5 ஆண்டுகள் நீங்கள் சிரமப்பட வேண்டும். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டமாக்கினார். கலைஞர் அதனை உண்மையான சத்துணவு திட்டமாக மாற்றினார். எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் என்ற பெயரை கூட கலைஞர் மாற்றவில்லை. அத்தகைய பெருந்தன்மை படைத்தவர். ஆனால் தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்கள் இந்த ஆட்சியில் முடக்கப்பட்டன.
நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களது நிலை என்றும் மாறாது. தேவேகவுடா, குஜ்ரால், போன்றவர்கள் பிரதமரானது கருணாநிதி அடையாளம் காட்டியதால். எனவே கருணாநிதி அடையாளம் காட்டுபவர் தான் இந்தியாவில் பிரதமராக முடியும்.
இவ்வாறு திருச்சி சிவா எம்.பி பேசினார்.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தொலைகாட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறோம் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி


தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தொலைகாட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இது குறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
தொலைகாட்சி பெட்டி சின்னம்
தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளராக தென்காசி பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். ஏற்கனவே சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட தொலைகாட்சி பெட்டி சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருந்தோம்.
அதுபோல் இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தோம். எங்களுக்கு நாங்கள் கேட்டது போல தொலைகாட்சி பெட்டி சின்னத்தை மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேசுவரி ஒதுக்கி உள்ளார்.
விவசாயத்துக்காக இயற்கை வளங்களை மேம்படுத்துதல், புதிய தொழிற்சாலைகளை உருவாக்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறேன். எங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
பிரசாரம்
கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்கள் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறினார்.
அப்போது டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ., புதிய தமிழகம் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் அய்யர், மாநகர் மாவட்ட செயலாளர் செல்லப்பா, இளைஞர் அணி செயலாளர் மதுரம் பாஸ்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் துரையரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

தேர்தல் விதிமுறை மீறல்: டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு


தென்காசி பாராளுமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இவர் நேற்று இரவு ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் பிரசாரம் செய்தார். இரவு 10 மணிக்கு மேல் அவர் பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி முத்தையா தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதில் டாக்டர் கிருஷ்ணசாமி தேர்தல் விதிமுறை மீறி இரவு 10 மணிக்கு மேல் அதிக வாகனங்களில் சென்று பிரசாரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தனுஷ்கோடி, செட்டியார் பட்டி தி.மு.க. நகர செயலாளர் தங்கபாண்டியன், ராமராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தேர்தல் விதிமுறை மீறல்: டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம்


ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் தென்காசி தொகுதி டாக்டர் க.கிருஷ்ணசாமி, மதுரை தொகுதி வி.வேலுச்சாமி ஆகி யோரை ஆதரித்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தேர்தல் பிரச்சார உரை நிகழ்த்தினார்.
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார் (இராஜபாளையம், 1.4.2014)
தென்காசி - க.கிருஷ்ணசாமி
தென்காசி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்களை ஆதரித்து இராஜபாளையம் நகர திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் 1.4.2014 அன்று மாலை 5 மணியளவில், இராஜபாளையம் பொன்விழா மைதானத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாநில இளைஞரணிச் செயலாளர் இல.திருப்பதி தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்டத் தலைவர் வானவில் வ.மணி, செயலாளர் தி.ஆதவன், தென்காசி மாவட்டத் தலைவர் டேவிட் செல்லத்துரை, செயலாளர் அய்.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைமைக் கழகப் பேச்சாளர் முனைவர் க.அன்பழகன் தேர்தல் பிரச்சார உரை நிகழ்த்தினார்.
செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு உரை அடுத்தாக, கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் உரையாற்றுகையில்:
ஜெயலலிதா அம்மையார் ஆட்சியின் அவலங்களையும், கம்யூனிஸ்ட் கட்சி நண்பர் களான பிரகாஷ்காரத் போன்றோர் மூன்றாவது அணி அமைக்க அம்மையார் அவர்களுடன் திட்டமிட்டு கைகோர்த்து விட்டு, பிறகு அவர்களை நண்பர்களை (தா.பாண்டியன் போன்றோரை) கூட்டணியில் இருந்து  கழட்டி விட்டாரா? அல்லது கழட்டி விடப்பட்டனரா? என்பது அனைவருக்கும் தெரியும். இதிலிருந்து தெரிகிறது அல்லவா? அம்மையார் ஆட்சியின் அரசியல் நாணயம்! கலைஞராக இருந்தால் இதுபோன்று செய்து இருப்பாரா? இருக்கமாட்டார். அவர் அழைத்தாலும் கூட்டணிக்கு உண்மையாக இருப்பார். உண்மையாக கூட்டணி வைத்துக் கொள்வார். எதிர்க்கிறார் என்றாலும் பண்போடு எதிர்ப்பார். ஆனால் இந்த அம்மையார் அதுபோல் உண்டா?
கூட்டணி கட்சி நண்பர்களை மதிக்கும் பண்பு  இந்த அம்மையாரிடம் இருக்கிறதா? இல்லையே! இவரது ஆட்சியின் சாதனைகள் என்ன செய்தார். வேதனைகள்தான் கொடுத்தார் என பல செய்திகளை மக்களுக்கு எடுத்துக் கூறினார்.
திமுக மாவட்ட செயலாளர் சாத்தூர் இராமச்சந்திரன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார் (இராஜபாளையம், 1.4.2014)
தமிழர் தலைவர் வருகை
தமிழர் தலைவர் அவர்கள் கூட்டம் நடக்கும் இடத்திற்கு (மேடைக்கு) சரியாக மாலை 6.30 மணிக்கு வருகை தந்தார்கள். திராவிடர் கழகத் தோழர்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் உள அன்போடு வரவேற்றார்கள்.
தமிழர் தலைவருக்கு சிறப்பு
தமிழர் தலைவர் அவர்களுக்கு வேட்பாளர் க.கிருஷ்ண சாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்டத் தலைவர் வானவில் வ.மணி, இல.திருப்பதி, திமுக ஒன்றிய செயலாளர் கோ.தனுஷ்கோடி, நகரச் செயலாளர் அ.உதய சூரியன், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் இராசா அருண் மொழி, புதிய தமிழகம் கோ.காமராஜ், திமுக மாணவரணி பொறுப்பாளர் வேல் முருகன் உள்ளிட்ட திராவிடர் கழக கூட்டணி கட்சி தோழர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.
வேட்பாளர் க.கிருஷ்ணசாமி வாக்கு கேட்டு உரை
தென்காசி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தனக்கு வாக்குகேட்டு, இத்தொகுதியில் நான் நிற்கவில்லை. தலைவர் கலைஞர் நிற்கிறார் அவரை நினைத்து, திமுகவை நினைத்து தனக்கு வாக்களியுங்கள் என்று உரையாற்றினார்.
இறுதியாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தென்காசி தொகுதி வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்களை ஆதரித்து தேர்தல் (பிரச்சார) பரப்புரை, சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
கலந்துகொண்டோர்
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ். எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட ப.க. செயலாளர் கே.டி.சி.குருசாமி, மாநில ப.க.துணைத் தலைவர் நல்லதம்பி, மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.கோவிந் தன், திமுக வாசுதேவன், நகர திராவிடர் கழகச் செயலாளர் இரா.பாண்டி முருகன் உள்ளிட்ட திராவிடர் கழக ஜனநயாக முற்போக்கு கூட்டணி கட்சித் தோழர்கள், பொதுமக்கள் அதிகமான அளவில் தமிழர் தலைவர் அவர்களின் உயைக் கேட்க ஆர்வமாக கலந்து கொண்டு நின்று கூட்டம் கேட்டு சென்றனர். முன்னதாக இராஜபாளையம் நகர திராவிடர் கழகத் துணைத் தலைவர் ஆ.சிவக்குமார் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்.


Read more: http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/78000-2014-04-02-10-32-49.html#ixzz2z8b196yo

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

சமுக நீதி காக்க பா.ஜ.க விற்கு வாக்களிக்காதீர்கள்.


பிஜேபியும், பார்ப்பனர்களும் ஏன்
இடஒதுக்கீடை எதிர்கிறார்கள் தெரியுமா?
ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில்
பிராமணர்கள் 9 பேர்!
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில்
பிராமணர்கள் 166 பேர்!
வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில்
பிராமணர்கள் 58 பேர்!
பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில்
பிராமணர்கள் 50 பேர்!
மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில்
பிராமணர்கள் 250 பேர்!
கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர்.
அதில் பிராமணர்கள் 2376 பேர்!
பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில்
பிராமணர்கள் 190 பேர்!
ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில்
பிராமணர்கள் 89 பேர்!
-குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )
மொத்த மக்கள்தொகையில் வெறும்
மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள்
இடஒதுக்கீடுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து
பிறரை தூண்டி விடுகின்றனர் ?
இடஒதுக்கீடுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம்
செய்கின்றனர்
என இப்போது புரிகிறதா?
பிராமணர்கள் நம்மை அடிமையாக
வைத்து இருக்கவே இடஓதுக்கீட்டை எதிர்ந்து வருகிறான்.

செந்தில் மள்ளர் தேனி தொகுதியில் களம் காண்கிறார்..


தேனி தொகுதி மள்ளர்களே! இங்கே களம் காணும் மள்ளர் மீட்பு களம் அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களிப்பீர் , வெற்றி பெற செய்வீர்.
தேவேந்திரர்கள் தலை நிமிர தலித் நிலைப்பாடு அல்லாத அண்ணன் செந்தில் மள்ளருக்கு வாக்களிப்பீர்.
·

ராமநாதபுரம் மாவட்ட மள்ளர்கள் அனைவரும் சுப அண்ணாமலையாரின் பானை சின்னத்திற்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்.


ராமநாதபுரம் மாவட்ட மள்ளர்கள் அனைவரும் சுப அண்ணாமலையாரின் பானை சின்னத்திற்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்..
இந்த முறை அவரை பெருமளவு வாக்குகள் பெற்று சமுத்ய தலைவர் என்று அங்கீகாரம் வழங்க வேண்டும்..தேவேந்திரர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை என்ற சிறந்த நிலைப்பாட்டோடு உள்ள தலைவர்..இவரை நாம் தலைவராக ஏற்று கொண்டால் நமது சமுதாயம் கண்டிப்பாக இழி நிலையிலிருந்து வெளி வரும்...
வாக்களிப்பீர் பானை சின்னத்திற்கு..மறவாதீர் மள்ளர்களே..

செந்தில் மள்ளர் தேனி தொகுதியில் களம் காண்கிறார் ...


தென் பாண்டி வேந்தர் தேக்கம்பட்டி பலசுந்தரராசு அவர்களின் நினைவிடத்தில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் தமிழ்த்திரு கு .செந்தில் மள்ளர் அவர்கள் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் ........
அரசியலை எழுவோம்..... ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் .......அதிகாரப் பகிர்வே ....அடுத்தக் கட்ட நகர்வு ......என்ற முழக்கத்தோடு மெழுகுவர்த்திகள் சின்னத்திற்கு 
வாக்குகள் கேட்டு வலம்வந்த நிழற்படங்கள் .

சனி, 12 ஏப்ரல், 2014

வாக்களிப்பீர் "தொலைக்காட்சி பெட்டி" சின்னத்திற்க்கு...

Puthiya Thamilagam Tenkasi Lokshaba

தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளா் டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் நேற்று சுரண்டையில் சுற்றுப்பயணம்..

கடையல்லூா் பள்ளிவாசல் முன்பு ..

கடையநல்லூரை சுற்றியுள்ள கிராமத்தில் தென்காசி நாடாளுமன்ற வெற்றி வேட்பாளா் டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் தீவிர வாக்கு சேகாித்தபோது..


1962ம் ஆண்டு காமராஜா் அவா்களால் உருவாக்கப்பட்ட கருப்பாநதி திட்டம் இரட்டைகுளம் கால்வாய் திட்டம் கிடப்பில் போடபட்டுள்ளது. எனக்கு டிவி சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்தால் இத்திட்டத்தை நான் நிறைவேற்றி வைப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினாின் தொகுதி மேம்பாட்டிற்கு ஆண்டுக்கு 5கோடி நிதி ஒதுக்குகிறாா்கள். அந்த நிதி முழுவதும் மக்களிடம் சென்றடைய வைப்பேன்.
MLA பதவி MP பதவியைவிட உயா்ந்த பதவிதான். நான் பதவிக்காக தென்காசியில் போட்டியிட வில்லை. நான் ஓட்டபிடாரம் MLA இருந்தும் தென்காசியில் ஏன் போட்டியிடுகிறேன் என்றால் தென்காசி தொகுதியை தென்தமிழகத்தை முன்னேற்றம் அடைய வேண்டுமெனில் பாராளுமன்றத்தில் வலுவான குரல் ஒலிக்க வேண்டும். அதற்காகத்தான் போட்டியிடுகிறேன்.

செந்தில் மள்ளர் தேனி தொகுதியில் களம் காண்கிறார் ....

தேவேந்திர குல வேளாளர் திருவிழா....

தென்தமிழகம் சமவாய்ப்பு பெற்றிட வாக்களிப்பீர்! தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்திற்கு...

செந்தில் மள்ளர் தேனி தொகுதியில் களம் காண்கிறார் ....

செந்தில் மள்ளர் தேனி தொகுதியில் களம் காண்கிறார் ....

...தென்காசி - டாக்டர் கிருஷ்ணசாமியே முந்துகிறார்.


கடந்த சில நாட்களாக தென்காசி பாராளுமன்ற தொகுதியில் களத்தில் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியின்வெற்றி வாய்ப்பை அறியும் நோக்கில் தொகுதி முழுக்க சுற்றியதில் நான் எனது நண்பர்களுடன் அவதானித்ததை சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன்.
1. தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர்,சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற அணைத்து சட்டமன்ற தொகுதிளுக்கு உட்பட்ட பகுதிவாழ் சமூக சிந்தனையுள்ள தேவேந்திரர்கள் அனைவரும் பிரிவினை மறந்து ஒருமனதாக டாக்டர் கிருஷ்ணசாமியையேஆதரிப்பதாய் உணர்ந்தேன்.
2. தேவேந்திரர்களில் சிலர் வசந்தி முருகேசனையும், வெகு சிலர் சதன் திருமலை குமாரையும் ஆதரிப்பதாய் கூறுகிறார்கள் அவர்களால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது .
3.கூட்டணி கட்சி என்பதை கருத்தில் கொண்டு தி.மு.க தொண்டர்கள், விடுதலை சிறுத்தைகள், இஸ்லாமியர்கள் அனைவரும் சாதி-மதம் மறந்து டாக்டர் கிருஷ்ணசாமியை தான் ஆதரிகிரார்கள் அதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் எனும் அளவிற்கு தான் இருக்கிறது அந்த கட்சி காரர்களின் மனநிலையும் ஆதலால் எமது சமூக வாக்கோடு கூட்டணி கட்சி தொண்டர்களும் இணையும் போது டாக்டர் கிருஷணசாமியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றே எண்ணுகிறேன்.
4.மொத்தத்தில் தென்காசியில் இன்று வரை டாக்டர் கிருஷ்ணசாமியின்கையே மேலோங்கி இருக்கிறது ஆனால் அங்கே சதன் திருமளைகுமாருக்கு இணையாக வசந்தி முருகேசனும் வெற்றியை எட்டி விடும் தொலைவிலையே இருக்கின்றனர், டாக்டர் கிருஷ்ணசாமி வெகு குறைந்த வாக்குகளில் தான் முன்னிலையில் இருக்கிறார் ஆதலால் புதிய தமிழகம் தொண்டர்களும் தேவேந்திர குல சமூக உணர்வாளர்களும் பிற சமூக நடுநிலை வாக்காளர்களின் வாக்கை பெற இன்னும் தீவரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
  அன்பிகினிய தேவேந்திரர்களே செய் அல்லது செத்து மடி என்கிற இக்கட்டான நிலையில் அரசியல் களத்தில் நிற்கிறது எமது சமூகம், ஆதலால் எண்ணற்ற தேவேந்திரர்கள் சமூக பெயரை சொல்லி பல தொகுதிகளில் எம் சமூக அடையாளமான சிவப்பு பச்சை கொடியேந்தி நின்றாலும் ஜெயிக்க கூடிய வல்லமையுடனும் ஆற்றலுடனும் டாக்டர் கிருஷணசாமி மட்டுமே இன்று களத்தில் நிற்கிறார்.
ஆதலால் தமிழத்தில் மட்டும் அல்ல கடல் கடந்து வாழும் தேவேந்திரர்களின் பார்வையும் தென்காசியை நோக்கி மட்டுமே சுழன்று கொண்டிருகிறது இன்றைய அரசியல் களத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியின்வெற்றி தேவேந்திரர்களின் வெற்றி என்பதை உணர்ந்து உணர்வுள்ள தேவேந்திரர்கள் அனைவரும் டாக்டர் கிருஷ்ணசாமியின்வெற்றிக்கு உங்களால் ஆனதை ஏதோ ஒரு வகையில் களப்பணி செய்யுங்கள் தேவேந்திரர்களின் குரலாக பாராளுமன்றத்தில் கிருஷ்ணசாமியின்குரல் ஒலிக்கட்டும்.
எமது சின்னம் தொலைகாட்சிபெட்டி மறவாதீர் தேவேந்திரர்களே.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வெற்றி வேட்பாளர் டாக்டர் அய்யா அவர்கள் தென்காசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுரண்டை பகுதியில் வாக்குகள் சேகரித்த போது...

தென்காசி தொகுதியில் தொழில் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி பேச்சு.

புளியங்குடி, : தென்காசி தொகுதியில் தொழில் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என புதியதமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி பேசினார்.
 புளியங்குடியில் நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அரபி பாடசாலையில் நடந்த ஊழியர் கூட்டத்திற்கு நகரத்தலைவர் செய்யது சுலை மான் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் செய்யது பட்டாணி, மைதீன்பிச்சை, முன்னாள் எம்.எல்.ஏ.ரசாக் நகர தி.மு.க.செயலாளர் வக்கீல்.செல்வகுமார். நகர ம.ம.க தலைவர் முகைதீன்அப்துல்காதர், புதிய தமிழகம் கட்சி மாவட்ட இணைச் செயலாளர் இன்பராஜ், நகர செயலாளர் பால்ராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன் னிலை வகித்தனர். முஸ்லீம் லீக் நகர செயலாளர் அப்துல்வஹாப் வரவேற்றார்.
 கூட்டத்தில் முஸ்லிம் லீக் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், மாவட்ட முஸ்லீம்லீக் பொருளாளர் காதர் முகைதீன், முன்னாள் நகரசெயலாளர் அப்துல்ரஹீம், வாசு தேவநல்லூர் செய்யது, தி.மு.க. பேச்சாளர் மீனாட்சி சுந்தரம், ஆசிரியர் முப்பிடாதி, நகர த.மு.மு.க.செயலாளர் அசன் கவுன்சிலர் முருகன் ஆகியோர் வரும் தேர்தலில் ஒற்றுமையாக பணியாற்றி டாக்டர்.கிருஷ்ணசாமியை அமோக வெற்றிபெறச் செய்திடவேண்டும் என பேசினர்.
தொடர்ந்து தென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர்.கிருஷ்ணசாமி பேசுகையில், ‘தென்காசி தொகுதியை தமிழகத்தில் முதல் நிலை தொகுதியாக மாற்றிடவும், தொழில்வளர்ச்சியடைந்த தொகுதியாகவும் மாற்றப் பாடுபடுவேன்.
இஸ்லாமியர்களின் நீண்டநாள் கோரிக்கையான ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையினை அமல்படுத்திடவும், வாசுதேவநல்லூர் செண்பகவல்லியாறு அணை உடைப்பினை சீர்செய்திடவும், நான்கு வழிச்சாலை கொண்டுவருதல் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றிட பாடுபடுவேன்‘ என்றார். முஸ்லீம் லீக் நகர செயலா ளர் வக்கீல்.அப்பாஸ் நன்றி கூறினார்.

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

செந்தில் மள்ளர் தேனி தொகுதியில் களம் காண்கிறார்


 .


  • தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனை 7-4-2014 இன்று நடைபெற்றது .வேட்புமனு பரிசீலனையின் போது மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் கு .செந்தில் மள்ளர் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என அணைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர் .இருப்பினும் தடையை மீறி வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டு தலைவர் செந்தில் தேனி தொகுதியில் களம் காண்கிறார் 

திங்கள், 7 ஏப்ரல், 2014

தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி மனுதாக்கல்...



தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். நெல்லை, தென்காசி தொகுதிகளில் போட்டியிட நேற்று ஒரே நாளில் 8 பேர் மனுதாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல்
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழ்நாட்டில் கடந்த 29–ந் தேதி தொடங்கியது. நெல்லை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.
4–வது நாளாக நேற்று பகல் 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நெல்லை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தேவேந்திரன் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான மு.கருணாகரனிடம் நேற்று மனு தாக்கல் செய்தார்.
சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட எஸ்.சுப்பிரமணியன் (இந்து மக்கள் கட்சி), எலிசபெத், ஜெர்மானுஷ், சுரேஷ்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு நேற்று மட்டும் 5 பேர் மனு தாக்கல் செய்தனர். முன்னதாக இந்து மக்கள் கட்சி வேட்பாளர் எஸ்.சுப்பிரமணியன், மனு தாக்கல் செய்ய எருமை மாட்டில் ஏறி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
டாக்டர் கிருஷ்ணசாமி
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் 2 மனுக்களை தாக்கல் செய்தார்.
டாக்டர் கிருஷ்ணசாமி தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியும், மாவட்ட வருவாய் அலுவலருமான உமா மகேசுவரியிடம் கொடுத்தார். அப்போது, நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பூங்கோதை, மனிதநேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதை தொடர்ந்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முனீசுவரன் என்பவர் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேசுவரியும் மனு தாக்கல் செய்தார். அதேபோல் தென்காசி உதவி கலெக்டர் ரமேஷிடம், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட கண்ணன் மனு தாக்கல் செய்தார். தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு நேற்று 3 பேர் மனு தாக்கல் செய்தனர்.
நெல்லை, தென்காசி பாராளுமன்ற தொகுதிகளில் நேற்று மட்டும் 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
டாக்டர் கிருஷ்ணசாமியின் சொத்து மதிப்பு
தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தனது வேட்புமனுவை, சொத்து விவரங்கள் அடங்கிய ஆவணங்களுடன் தாக்கல் செய்தார்.
அதில் தனக்கு ரூ.5 லட்சமும், மனைவி டாக்டர் சந்திரிகா பெயரில் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 163–ம், மகன் ஷியாம் பெயரில் ரூ.9 ஆயிரமும் வங்கியில் கையிருப்பு இருப்பதாக கூறியுள்ளார். வங்கியில் முன்வைப்பு தொகை, விவசாய தளவாடங்கள், கார், வேன் உள்பட அசையும் சொத்துக்கள் டாக்டர் கிருஷ்ணசாமி பெயரில் ரூ.31 லட்சத்து 39 ஆயிரத்து 953–ம், மனைவி பெயரில் ரூ.90 லட்சத்து 22 ஆயிரத்து 233–ம், மகன் பெயரில் ரூ.11 லட்சத்து 99 ஆயிரத்து 415–ம் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.
விவசாய நிலங்கள், வீடு, ஆஸ்பத்திரி போன்ற அசையா சொத்துகள் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தற்போதைய மதிப்பின் படி ரூ.8 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரத்து 600–ம், மனைவி பெயரில் ரூ.5 கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 500–ம், மகன் பெயரில் ரூ.1 கோடியே 72 லடசத்து 51 ஆயிரத்து 900–ம் இருப்பதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்த ஆவணத்தில், எல்.ஐ.சி.யில் டாக்டர் கிருஷ்ணசாமி, அவருடைய மனைவி சந்திரிகா ஆகிய 2 பேரின் பெயரில் கூட்டாக வீட்டுக்கடன் வாங்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 3 முறை கடன் வாங்கி இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
ஒரு கடன் ரூ.43 லட்சத்து 42 ஆயிரத்து 343–ம், மற்றொரு கடன் ரூ.20 லட்சத்து 15 ஆயிரத்து 538–ம், இன்னெரு கடன் ரூ.38 லட்சத்து 80 ஆயிரத்து 168–ம் வாங்கி இருப்பதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு டிவி சின்னம்: ஹைகோர்ட் உத்தரவு ..

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணா சாமிக்கு தொலைக்காட்சி பெட்டி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் ஆணை வழங்க நடவடிக்கை வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி்யின் தலைவர் கிருஷ்ணசாமி, தனது கட்சிக்கு தொலைக்காட்சி பெட்டி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். ஆனால், அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தது. இன்று விசாரணைக்கு வந்த போது தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி பெட்டி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் ஆணை வழங்க நடவடிக்கை வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச் ஆணை பிறபித்துள்ளது. வி.சிக்கு நட்சத்திரம் ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு "நட்சத்திரம்" சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய தமிழகம், மமக கட்சிகளுக்கு சின்னம் வழங்க சட்டப்படி நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு சின்னம் வழங்க சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் ‘கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலின்போது ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட எங்கள் கட்சிக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.
2 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தற்போது நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். எனவே, இந்தத் தேர்தலிலும் எங்கள் கட்சிக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னி ஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தென்காசி தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி சட்டப்படி பரிசீலித்து முடிவு செய்வார்’’ என தெரிவித்தார். இதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதேபோல் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி அந்தக் கட்சியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
‘‘வேட்பு மனு தாக்கல் முடிவதற்கு முன்பாக மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கை பற்றி சட்டப்படி முடிவெடுக்கப்படும்’’ என்று தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.

டாக்டர் அய்யா புதிய தமிழகம் கட்சி விருதுநகர் மாவட்ட செயலாளர் திரு.கோ.ராமராஜ் அவர்களுடன் தொகுதி செயல்பாடு பற்றி கலந்து உரையாடும் போது---

தென்காசி தொகுதிக்கு கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல் ..

தென்காசி (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
மனைவி, மகன் மற்றும் தனது பெயரில் மொத்தம் ரூ.16.65 கோடிக்கு சொத்து உள்ளதாகக் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை அவர் வந்தார். மாவட்ட வருவாய் அலுவலரும், தென்காசி தொகுதி தேர்தல் அலுவலருமான பி. உமா மகேஸ்வரியிடம் வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
சொத்து மதிப்பு: வேட்புமனுவுடன் தனது பெயரிலும், மனைவி, மகன் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை உறுதிமொழிப் பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். கையிருப்பு, வங்கி இருப்பு, முதலீடு, நகைகள், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஆகியவற்றோடு சேர்த்து தனது பெயரில் ரூ.31.39 லட்சம், மனைவி பெயரில் ரூ.90.22 லட்சம், மகன் பெயரில் ரூ.11.99 லட்சம் சொத்து உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வேளாண்மை நிலம், வேளாண்மை அல்லாத நிலம், கட்டடம், வீடுகள் என்ற வகையில் தனது பெயரில் ரூ.8.21 கோடி, மனைவி பெயரில் ரூ.5.38 கோடி, மகன் பெயரில் ரூ.1.72 கோடி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மொத்த மதிப்பு ரூ.16.65 கோடி.
வழக்கு விவரம்: பொது ஒழுங்கு சீர்குலைவு, சட்டவிரோதமாகக் கூடுதல், சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் தில்லி சாணக்கியபுரி காவல்நிலையத்தில் பதிவான வழக்கு விசாரணை தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவை தவிர, தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக கடம்பூர் காவல்நிலையத்தில் பதிவான வழக்கு விசாரணை, கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நாற்பதும் வெற்றி: வேட்புமனு தாக்கலுக்கு பிறகு கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தென்காசி உள்பட தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். தென்மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை முன்னுக்கு கொண்டுவரவும், தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வேளாண்மை ஆகியவற்றை மேம்படுத்தவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றார்.

தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் அய்யா அவர்களை வழக்கறிஞர் ராஜ்குமார் தலைமையில் நேரில் சந்தித்து ஆதரவு அளித்த கூட்டமைப்பின் நிர்வாகிகள்...