ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 17 ஏப்ரல், 2014

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தொலைகாட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறோம் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி


தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தொலைகாட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இது குறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
தொலைகாட்சி பெட்டி சின்னம்
தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளராக தென்காசி பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். ஏற்கனவே சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட தொலைகாட்சி பெட்டி சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருந்தோம்.
அதுபோல் இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தோம். எங்களுக்கு நாங்கள் கேட்டது போல தொலைகாட்சி பெட்டி சின்னத்தை மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேசுவரி ஒதுக்கி உள்ளார்.
விவசாயத்துக்காக இயற்கை வளங்களை மேம்படுத்துதல், புதிய தொழிற்சாலைகளை உருவாக்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறேன். எங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
பிரசாரம்
கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்கள் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறினார்.
அப்போது டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ., புதிய தமிழகம் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் அய்யர், மாநகர் மாவட்ட செயலாளர் செல்லப்பா, இளைஞர் அணி செயலாளர் மதுரம் பாஸ்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் துரையரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக