சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணா சாமிக்கு
தொலைக்காட்சி பெட்டி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் ஆணை வழங்க நடவடிக்கை
வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி்யின் தலைவர்
கிருஷ்ணசாமி, தனது கட்சிக்கு தொலைக்காட்சி பெட்டி சின்னம் ஒதுக்க தேர்தல்
ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
ஆனால், அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை
இன்றைக்கு ஒத்திவைத்தது.
இன்று விசாரணைக்கு வந்த போது தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய
தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி பெட்டி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் ஆணை
வழங்க நடவடிக்கை வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அடங்கிய
பெஞ்ச் ஆணை பிறபித்துள்ளது.
வி.சிக்கு நட்சத்திரம்
ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள்
கட்சிக்கு "நட்சத்திரம்" சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்
கோரி அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த
சென்னை உயர் நீதிமன்றம், புதிய சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல்
ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக