புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்கள் அப்போது அவர் கூறியதாவது:-
பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விவசாய பொருட்களின் உற்பத்தி குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் உணவு பண்டங்கள் உட்பட அனைத்து பொருட்களுடைய விலைகள் அண்மைக் காலமாக தாறுமாறாக உயர்ந்து வருகின்றன.இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.பணி நிமித்தமாகவும் பல்வேறு சமூக காரணங்களுக்காகவும், ஒன்றரை கோடி மக்கள் தினமும் இரயிலில் பயணம் செய்கின்றனர்.
பெரும்பாலான பொருட்களும் நாட்டினுடைய ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு சரக்கு ரயில்கள் மூலமாகவே கொண்டு செல்லப்படுகிறது. மத்தியில் புதிய அரசு பதவியேற்று ஒரு மாதமே முடிந்துள்ளது. இன்னும் பதினைந்து தினங்களில் இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் திடீரென்று பயணிகள் கட்டணத்தில் 14% சதவிகிதமும் சரக்கு கட்டணத்தில் 6.5 சதவிகிதமும் உயர்த்தியிருப்பது இந்தியா முழுமைக்கும் உள்ள அனைத்து தரப்பு மக்களுடைய வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். சரக்கு கட்டண உயர்வு ஏற்கனவே உயர்ந்துள்ள விலைவாசியை மீண்டும் பண்மடங்கு அதிகரிக்கும். மோடி தலைமையிலான அரசு தலைமையேற்றவுடன் மக்களின் சுமைகளை குறைக்கும் என்றே நம்பினர். ஆனால் நேர்மாறாக மக்கள் தாங்கமுடியாத அளவிற்கு சரக்கு மற்றும் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோதமானதும் மக்கள் விரோதமானதும் ஆகும். எனவே சரக்கு மற்றும் ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
இரயில் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மாவாட்ட தலைநகரங்களில் உள்ள இரயில் நிலையம் முன்பு ஜுன் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
திருவள்ளூர் மாவாட்ட இந்து முன்னனி தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து காவல்துறை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இறுதி ஊர்வலத்தில் சிறுபான்மையினரின் தேவாலயங்கள், மற்றும் வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தி மொழி பேசாத மாநிலங்கள் மீது மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக