ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 28 ஜூன், 2014

ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சியினர் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்டத் தலைவர் ராம்நாத் தலைமை வகித்தார். மத்திய முன்னாள் இணையமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலர் என்.டி.எஸ்.சார்லஸ், ஐ.என்.டி.யூ.சி. செயலர் ஆவுடையப்பன், பேச்சாளர் ஆலடி சங்கரைய்யா, சங்கரபாண்டியன், வேணுகோபால், ராஜேஷ், மகிளா காங்கிரஸ் நிர்வாகி கோமதிசண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதிய தமிழகம்: ரயில் கட்டணம், டீசல் விலை உயர்வு ஆகியவற்றை குறைக்க வேண்டும். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்தவ மக்கள் மீதான தாக்குதலைக் கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி ரயில் நிலையம் அருகே புதிய தமிழகம் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேரன்மகாதேவி ஒன்றியச் செயலர் ஏ.எஸ்.முத்து வரவேற்றார். மாவட்ட இணைச் செயலர் எம்.சுரேந்திரன், மாவட்ட மகளிரணிச் செயலர் ஏ.முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்டச் செயலர் எம்.எஸ்.செல்லப்பா, மேற்கு மாவட்டச் செயலர் வீரா.அரவிந்தராசா, சிவகுமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பத், அண்ணாதுரை, முத்துராமன், முருகன், சிவகுமார், காளிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக