இரயில் கட்டண உயர்வு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மாவாட்ட தலைநகரங்களில் உள்ள இரயில் நிலையம் முன்பு ஜுன் 27 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாகடர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் அறிவித்திருந்தார்கள் அதன்படி இன்று தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் இரயில் மறியல் போராட்டங்கள் நடத்தினர்.
சென்னையில் மாநில அமைப்பு செயலாளர் வி.கே.அய்யர் தலைமையில் தெற்கு இரயிவே நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 30 கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்ட செயலாளர் கோ.ராமராஜ் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் ராமராஜ், செல்வகுமரேசன்,ரெ.கார்த்திக், மாணிக்கம்,கலைசெல்வன்,ராமசந்திரன்,சேகர், முத்துப்பாண்டி, முத்துராமன், செல்லமணி, பழனிசாமி, வழக்கறிஞர் ஏ.கே.ஜெகன்,குணா ஆகியோர் முன்னிலையில் விருதுநகர் இரயில் நிலையம் முன்பு 300 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இரயில் கட்டண உயர்வு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில் நிலையம் முன்பு முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.டி. கண்ணன், சீனிவாசன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட செயலாளர் செ.பாஸ்கர் தலைமையில்,தாமோதரன்,பன்னீர்செல்வம் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிற்றரசு,டிமிட்ரோ கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 150 பேர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில் நிலையம் முன்பு முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.டி. கண்ணன், சீனிவாசன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட செயலாளர் செ.பாஸ்கர் தலைமையில்,தாமோதரன்,பன்னீர்செல்வம் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிற்றரசு,டிமிட்ரோ கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 150 பேர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மாநில தொண்டரணி செயலாளர் லட்சுமண பாண்டியன் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் கிருபைராஜ், கண்ணன்மாநில பொதுகுழு உறுப்பினர், முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமி ஒன்றிய செயலாளர் அன்புராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமி ராஜசேகர் முன்னிலையில் நாகர்கோவில்- கோவை செல்லும் ரயில் முன்பு மறியலில் ஈடுபட்ட 54 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவாட்டத்தின் சார்பில், திருச்சி இரயில்வே சந்திப்பில் மாவாட்ட செயலாளர் அய்யப்பன் தலைமையில் ,மாநகர செயலாளர் சங்கர் முன்னிலையில் 52 பேர் இரயில் மறியல் செய்தபோது கைது செய்யப்பட்டனர்.
கோயமுத்தூர் மாவட்ட இரயில்வே சந்திப்பில் மறியல் செய்த மாவட்ட பொறுப்பாளர்கள் நக்கீரன்,சுப்பிரமணியன்,மாணிக்கவேல், சிவகுமார், சாந்தி உள்பட 34 பேர் கைது செய்யப்பட்டு இயில் நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை விடுதியில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நெல்லை மாநகர பொறுப்பாளர் செல்லப்பா தலைமையில் நெல்லைமாவட்ட இளைஞஎஅணி வீர அரவிந்தராஜா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் இரயில் நிலையம் முன்பு புறநகர் மாவட்ட செயலாளர் வி.சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 97 பேர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி இரயில் நிலையம் முன்பு முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயகுமார் தலைமையில் ரயில் மறியல் நடைபெற்றது. 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரயில் நிலையம்முன்பு மாவட்ட பொறுப்பாளர் மு.மாரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தொண்டர்கள் 60 பேர் கலந்துகொண்டனர்.
இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில், முன்னாள் பொறுப்பாளர் கலீல், முருகேசன் முன்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் பாலா, காமராஜ்,பால்ராஜ் ,முருகையாபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில், முன்னாள் பொறுப்பாளர் கலீல், முருகேசன் முன்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் பாலா, காமராஜ்,பால்ராஜ் ,முருகையாபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம், குளித்தலையில் ரயில் மறியலில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 9 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து, குளித்தலையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் ரயில் நிலையத்துக்கு வந்த இக்கட்சியினர், பாலக்காட்டிலிருந்து குளித்தலை வழியாக திருச்சி செல்லும் விரைவு பயணிகள் ரயிலை, ரயில் நிலையம் முன்பாக மறித்தனர்.
இந்த மறியலுக்கு புதிய தமிழகம் கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலர் க. ராஜசேகரன் தலைமை வகித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே மற்றும் குளித்தலை போலீஸார் மறியிலில் ஈடுபட்ட 9 பேரையும் கைது செய்தனர்.
ரயில் கட்டண உயர்வை கண்டித்து தஞ்சையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் குணா தலைமை வகித்தார்.
துணை செயலாளர் சுகுமார், நகர செயலாளர் அழகர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்
பாராளுமன்ற தொகுதி செயலாளர் கண்ணன், இளைஞரணி செயலாளர் விவேக், மாணவரணி செயலாளர் ராஜா,ஒன்றிய செயலாளர்கள் தியாகராஜன், கார்த்திக், ராஜ்மோகன், செந்தில்குமார், சதிஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக