நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்தறிய புதிய
தமிழகம் கட்சியின் அரசியல் உயர்நிலைக் குழுக்கூட்டம் இன்று 17.06.2014
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்-தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி
எம்.டி.,எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் சென்னை, நுங்கம்பாக்கம், வி.கங்காதரன்
தெருவிலுள்ள புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் காலை 9 மணி முதல்
நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாடெங்கும் பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினருக்கு எதிராக அதிகரித்துவரும் வன்கொடுமைகள் குறித்து புதிய தமிழகம் கட்சி ஆழ்ந்த கவலை கொள்கிறது. உ.பி.மாநிலத்தில் பதுகன் மாவட்டத்தில் கற்பழித்து கொடூரமாக தூக்கிலிடப்பட்டு 2 தலித் பெண்கள் கொலை, தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் உடப்பன்குளத்தில் 3 தலித் இளைஞர்கள் படுகொலை, அதேபகுதியில் அழகுனேரி கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார் என்ற தலித் இளைஞர் தீயிட்டு படுகொலை, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் கூமாபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் அடித்துக் கொலை உட்பட தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை கிராமத்தில் 44 தாழ்த்தப்பட்ட மக்களுடைய வீடுகள் சூறையாடப்பட்டதற்கும், 3 இளைஞர்கள் தாக்கப்பட்டதற்கும், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதற்கும் புதிய தமிழகம் கட்சி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி மத்திய, மாநில அரசுகளின் கண்களை மூடி
மறைத்துவிடக்கூடாது என்பதற்காகவும், மேலாதிக்க சாதி, மத வெறிக்கு துணைபோய்
விடக்கூடாது எனவும் மத்திய, மாநில அரசுகளை புதிய தமிழகம் கட்சி
எச்சரிக்கிறது. ஆதிக்கச் சாதிவெறியோடு நடத்தப்பட்ட இச்சம்பவங்களில் ஈடுபட்ட
உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டித்திடவும், எதிர்காலத்தில்
இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடந்திடா வண்ணம் நடவடிக்கை எடுத்திடவும் புதிய
தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக