ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

ஆகஸ்ட்31 தேவேந்திரகுல மக்களின் தன்னெழுச்சி நாள் !!!!!

ஆகஸ்ட்31 தேவேந்திரகுல மக்களின் தன்னெழுச்சி நாள் !!!!!
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் .. டாக்டர் . க கிருஷ்ணசாமி .. அவர்கள் தலைமையில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் 1995, ஆகஸ்ட் 31-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம், கொடியங்குளம் எனும் குக்கிராமத்தில் தமிழக காவல்துறையினர் குற்றவாளியைப் பிடிக்கப் போகிறோம் என்று கூறி ஒட்டுமொத்த கிராமத்தையே சூறையாடிய கொடிய சம்பவம் நிகழ்ந்த கொடியங்குளம் கறுப்பு தினம் இன்று. கடந்த ஒராண்டு காலமாக வட தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாதி ஆதிக்கத்தின் தொடக்கப் புள்ளியான 2012 நவம்பர் 7 அன்று நிகழ்ந்த தருமபுரி கலவரத்துக்கான விடை, விடுதலை கொடியங்குளத்தில் தான் இருக்கிறது. உண்மையில் இந்தக் ‘கொடியங்குளம் கலவரத்தில் தான்’ தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரின் சமூக வன்முறைக்கு எதிராக தலைவணங்காத உறுதியினைக் காண்பித்தார்கள். அதுவரையில் சமூக நல்லிணக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாதி ஒடுக்குமுறைகளை கடைப்பிடித்து வந்த ஆதிக்க சாதியினர் 1995-க்குப் பிறகு சமூக உரிமையை, சம நீதியை ஏற்றுக்கொள்ள தொடங்கினர்.
1995, ஆகஸ்ட் 31--இல் குற்றவாளியை பிடிக்கப்போகிறோம் என்று கூறி தமிழக காவல்துறையினர் கொடியங்குளம் கிராமத்தில் புகுந்தனர். ஆனால் சென்றது காவல்துறையினர் அல்ல, காவல்துறையினர் போன்று வேடமிட்ட காட்டுமிராண்டிகள் என்பது பின்புதான் தெரிய வந்தது. கிராமத்திற்குள் புகுந்தவர்கள் குற்றவாளிகளை தேடுவதை விட்டுவிட்டு வீடுகளில் புகுந்து கொள்ளை அடிக்க ஆரம்பித்தனர். வீடுகளில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. பணமும், நகைகளும் களவாடப்பட்டன. பின்புதான் தெரிந்தது அந்த காவல்துறையினர் அனைவரும் கள்ளர்கள் என்று. சூறையாடப்பட்ட கிராமத்திற்கு நீதிகேட்டு அன்றைய தேவேந்திரர்குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தனது போராட்டத்தை ஆரம்பித்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பதிக்கப்பட்ட கிராமத்தை பார்வையிட அன்றைய முதல்வர் நேரில் வந்த போது ஒட்டுமொத்த கிராமமே முதல்வர் சந்திப்பை புறக்கணித்தது. அவர் கொண்டு வந்த நிவாரண நிதியையும் அம்மக்கள் திருப்பினர். அவர்கள் தன்மானம் மிக்கவர்கள் என்பதை நிரூபித்தார்கள். மாறாக தென் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களையும், நிவாரண நிதியையும் வண்டி வண்டியாக அனுப்பி வைத்தனர். இதற்குமேல் நிவாரண பொருட்கள் வேண்டாம் என்று கூறி, வந்த நிவாரண பொருட்களை பக்கத்து கிராமங்களுக்கும் பகிர்ந்து கொடுத்த வரலாறு கொடியங்குளத்தில் தான் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சுயமரியாதையோடு வாழ்கிறோம் என்பதை நிரூபித்துக் காட்டினர். தேவேந்திரர்குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒருங்கிணைத்து நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்தது. ஆதிக்க சாதியினரின் சாதி ஆதிக்க கொட்டம் அடக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் தலைநிமிர்வு உண்டானது. ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாக புதிய தமிழகம் எனும் அரசியல் கட்சி உருவானது. 1995 முதல் 2000 முதல் தேவேந்திரகுல மக்கள் முன்னெடுத்த சமூக சமநீதிக்கான போராட்டத்தில் பல உயிர்கள் களபலியாயின. அவர்களின் உயிர் தியாகத்தால் தான் இன்று தென்தமிழகம் யாருக்கும் தலைவணங்காமல் தலைநிமிர்ந்து நிற்கிறது. கொடியங்குளம் கறுப்பு தினமான இன்று சமூக சம உரிமைப் போராட்டத்தில் களப்பலியான தியாகி பிலிப் அந்தோணி, தியாகி ஆலந்தா சண்முகம் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் நமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக