ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 21 செப்டம்பர், 2015

தேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய டாக்டர் அய்யா அவர்களுக்கு நன்றி ..!!!!

 தேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய டாக்டர் அய்யா அவர்களுக்கு நன்றி ..!!!! (16.09.2015) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டி!
“இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியபோது முக்கியமான மூன்று கோரிக்கைகளை இந்த மானியக் கோரிக்கை விவாதத்திலே வலியுறுத்திப் பேசினேன்.
அதாவது “பட்டியலினத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒரே பிரிவு மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலே கடந்த நான்கு ஆண்டு காலமாக பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஆறு பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதை அறிந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசியத் தலைவர் அமித்ஷா அவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மக்கள் முற்பட்டோராக விரும்புகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.
தமிழ், தமிழர், திராவிடம் பேசக்கூடிய இந்த மண்ணில் ஒரு தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த ஆட்சியே தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, ஆனால் நாங்கள் கெளரவமாக நடத்தப்பட வேண்டுமென்று ஒரு சமுதாயம் குரல் கொடுக்கின்ற போது அதை அரசு கவனிக்காமல் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க நடவடிக்க எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக