ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 21 செப்டம்பர், 2015

தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் வாதிரியார்களும் ......!!!!...தேவேந்திரர் சமுக பிரிவில் வாதிரியார்கள் ..!!!!!..


..... தமிழகத்தின் மூவேந்தர் மரபைத் தோற்றுவித்து, மருத நிலத்தில் நெல் வேளாண்மையை உண்டு செய்து, மள்ளர், களமர், தேவேந்திர குல வேளாளர், காலாடி, கடையர், பலகனார், பணிக்கனார், குடும்பனார், பண்ணாடி, வயல்காரர், வாதிரியார்… என்று பல்வேறு பெயர்களில் வாழ்ந்து வரும் தமிழகத்தின் மூத்த குடி தேவேந்திர குல சமுகமாகும் ..தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதிகளின நெருக்கடிக்கு ஆளாகி ஒடுக்கப்பட்ட மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களின் ஒரு பிரிவினரே இன்று தங்களை தனிச் சாதியினர் என்று சொல்லிக்கொள்ளும் வாதிரியார் இனத்தவர்...நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் ஆதிக்க சாதியினரின் பண்பாட்டு ஒடுக்குதலுக்கு ஆளான தேவேந்திரர்கள் தமது மருதநில வேளாண் மரபை விட்டு விடாது போராடி இன்றும் வேளாண் மக்களாக வாழ்ந்து வருகின்றனா;. ஆனால் இங்கே ஒரு வியப்பான, விந்தையான சமூக மாற்றம் இயல்பாக நடந்தேறியிருக்கிறது. வேளாண் தொழில் செய்த மள்ளர்களில் ஒரு பிரிவினர் நெசவு செய்தனர். அவர்களே இன்று வாதிரியார் என்று அழைத்து கொள்கின்றனர்.. தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் உள்ளடக்கி பரமன்குறிச்சியை மையமாகக் கொண்டு சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழும் மொத்த மக்கள் தொகை சுமார் 25000 பேர் மட்டுமே ஆவர்.... தமிழகத்தின் மக்கள் தொகையில் ஒரு கோடிக்கு மேல் வாழும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளரின் ஒரு பிரிவினர் தங்களை அந்நியப்படுத்தி சிறுபான்மையாக காணாமல் போய் விடுவரோ என்ற கருணையுடன் கூடிய தொலைநோக்கு பார்வையும் எமக்கு உ ண்டு... தமிழகத்தில் பெரிதும் பரவி வாழும் ஒன்றரை கோடி தேவேந்திர குல வேளாளாகளும் பல்வேறு குலப்பட்டங்களையும் பிரிவுகளையும் கொண்டு விளங்குவர் ஆவர். இதில் தென் மாவட்டங்களில் வாதிரியார் எனும் பட்டத்துடன் வாழும் சமுதாயத்தினர் தேவேந்திர குல வேளாளரில் ஒரு பிரிவினரே ஆவர்..வாதிரியார் தேவேந்திர குலத்தவரே என்பதற்கான ஆதாரங்கள்..... “பரமன்குறிச்சி பள்ளர்கள் நெசவுத்தொழில் செய்து வந்தார்கள். வெள்ளையரது வியாபாரச் சுரண்டலினால் இவர்களது தொழில் நசிந்தது. இவர்களில் சிலர் வெள்ளையரால் கொடுமைப்படுத்தப்பட்டனர். இதனால் அதிருப்தியுற்றிருந்த பள்ளரையும் ஊமைத்துரை வெள்ளையர் எதிர்ப்பணியில் சேர்த்துக் கொண்டான்”.. (வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் -பக்-14).... “வெள்ளையர் எதிர்ப்பு போரில் சாதி ரீதியில் பள்ளர்கள் கணிசமாக இருந்தார்கள். இவர்களைத் தன் பக்கம் குறிப்பாக பரமன்குறிச்சி பள்ளர்களை தமது போராட்டத்தில் பயன்படுத்திக் கொண்டான் ஊமைத்துரை” (கதைப்பாடல்களும சமூகமும் – பக்-70)...திரு.வே.கோபாலகிருஷ்ணன் சட்டமன்ற பேச்சு
4.5.95 அன்று சங்கரன்கோவில் சட்டமன்ற ஒறுப்பினர் திரு,வே.கோபால கிருஷ்ணன் ஆதிதிராவிட நலத்துறை மானியக் கோரிக்கையின் மீது பேசியபோது பின்வருமாறு பதிவு செய்திருக்கின்;றார். “தமிழகத்தில் 1 கோடி மக்கள் தொகை கொண்ட தேவேந்திர குல வேளாளர் பள்ளர், குடும்பன் பண்ணாடி, காலாடி, வாதிரியான், பட்டக்காரர் தேவேந்திர குலத்தான் என்று பல்வெறு பெயர்களில் அரசு பதிவு இதழ்களில் குறிப்பிட்டுள்ளது. இப்பிரிவு அனைத்தையும் ஒரே பிரிவாக “தேவேந்திர குல வேளாளர்” என்று அறிவிக்கப்பட வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்” (மள்ளர் மலர் – ஜூன் 1995- பக்22) இப்பதிவு தேவேந்திரர்களில் ஒரு பிரிவு வாதிரியார் என்பதையே காட்டுவதாகும். வாதிரியாருக்கென திருச்செந்தூரில் மடம் ஒன்று பாழடைந்த நிலையில் இன்றும் இருப்பதும், அது தேவேந்திர குலத்தாருக்கான மடத்தோடு ஒட்டி அமைந்துள்ளது – இவர்களது தேவேந்திர குல வேளாளருக்குமான பண்பாட்டு உறவையும சாதியத் தொடர்பையும வெளிக்காட்டும் சரித்திரச் சான்றாகும். 1976-க்கு முன்னர் இவர்கள் பள்ளர் என்றே வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வசதிக்காகத் தங்களை இனங்காட்டியது தேவேந்திரருக்கும் வாதிரியார்களுக்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பை வலியுறுத்துவதாகும். வாதிரியார் தெரு “பள்ளக்குடி” என அழைக்கப்படுவது மேலும் இத்தொடர்பை வலு சேர்க்கிறது.
நெசவுத்தொழிலை ஏற்றுள்ள வாதிரியார் சமூகம் பண்பாடு பழக்க வழக்கங்கள் என்பதோடு பள்ளர் என்ற பெயரை ஏற்றுக்கொண்டு வாழ்வது அனைத்திலுமே தேவேந்திரரோடு தொடர்புடைய சமூகமாக விளங்குவதால் இவர்களைத் தேவேந்திரர்களின் ஒரு உட்பிரிவாகவே நான் கருதுகிறேன் .... தற்போது தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை கோரி வலிமையான போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் வாதிரியார்கள் தங்களையும் இணைத்து கொள்வார்கள் என நம்புகிறேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக