தியாகி இம்மனுவேல்சேகரனின் நினைவு நாளைஅரசு
விழாவாக நடத்த வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை..வேண்டும் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழாவாக நடத்த வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை..வேண்டும் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இமானுவேல் சேகரனின் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது: மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போதுதான் இமானுவேல் சேகரனுக்கு தபால் தலை வெளியிடப்பட்டது. தேவேந்திர குல மக்களின் நலனுக்காக பாடுபடும் இயக்கமாக காங்கிரஸ் கட்சி உள்ளது என்றார்.
அஞ்சலி செலுத்திவிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியது: 2011-இல் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அதற்காக இதுவரை காவல்துறைமீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்கவில்லை என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்: இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும். நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே அதை அறிவிக்க வேண்டும்.
அருமை.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு