ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 21 செப்டம்பர், 2015

'' தெய்வ திருமகனார் தியாகி இமானுவேல் சேகரனார் '' அவர்களின் குரு பூஜை சீரும் சிறப்புமாக நடை பெற்று முடிந்தது.

'' தெய்வ திருமகனார் தியாகி இமானுவேல் சேகரனார் '' அவர்களின் குரு பூஜை சீரும் சிறப்புமாக நடை பெற்று முடிந்தது.
.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறபித்த தேவேந்திர குல சிங்களுக்கு & நம் சமூக தலைவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக எந்த ஒரு வன்முறை சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது ... காவல் துறைக்கும் வாழ்த்துக்கள் .. நிகழ்சிகளை ஒருக்கிணைத்து , தலைவர்களை வரவேற்று , சிறப்பான ஏற்பாடுகளை செய்த "தேவேந்திரர் பண்பாட்டு கழக " நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்
.
முதல் முதலில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும் , காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் அவர்களுக்கும் மற்றும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் . திருமாவளவன் அவர்களுக்கும் அனைத்து தேவேந்திர குல மக்கள் சார்பாக நன்றி...!!!!
.
எப்பவும் போல
.
அதிமுகவில் வாய்பேசாத சுந்தராஜ், செல்லூர் ராஜ்.கலந்து கொண்டார் ... அக் ..30 அதிமுகவை தோற்றுவித்த தலைவர் தேவர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதால் அம்மையார் வரவில்லை..
.
திமுகவில் ஊனமுற்ற தங்கவேலன், தமிழரசி.(ஸ்டாலின் அக்.30 செல்லுவதால் வரவில்லை)
.
தேமுதிகவில் புதியதாக எம்.எல்.ஏ சுபா. (விஜயகாந்த் அக்.30 செல்லுவதால் வரவில்லை)
.
பி.ஜே.பியில்.சௌந்தராஜன் ( தமிழிசை அக்.30 செல்லுவதால் வரவில்லை)
.
நாம் தமிழர் : வரவில்லை ( காரணம் கொம்பன் படம் மற்றும் அக்.30 செல்லுவதால் வரவில்லை)
.
கம்யுனிஸ்ட் : வரவில்லை ( காரணம் நாம் தலித் இல்லாததால் மற்றும் அக்.30 செல்லுவதால் வரவில்லை)
.
பா.ம.க. : வரவில்லை ( காரணம் மதுரை விமான நிலையம் கண்டன போஸ்டர் )
.
தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வந்தார் ... அதிமுக அணியில் இருப்பதால் எதுவும் பேசவில்லை ....அதைவிட கொடுமை தமாக , பாஜக போன்ற கட்சிகள் அதன் SC அணி தலைவர்களை அனுப்பி வைத்தது .. அந்த அடிமைகள் அந்த கட்சிகளின் SC துறை சார்பாக கலந்து கொண்டது ... இறுதியாக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் ..டாக்டர் . க . கிருஷ்ணசாமி .. M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் பல்லாயிரகணக்கான தொண்டர்கள் படையுடன் வீர வணக்கம் செலுத்தினார் .. பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதையும் மீறி தேவேந்திர குல மக்களுடைய கோரிக்கைகளையும், அய்யா இம்மானுவேல் சேகரனுக்கு புகழாரம் சூட்டினார் .வீர வணக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உ றவுகளுக்கும் நன்றி ..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக