ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 21 செப்டம்பர், 2015

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னர் ... டாக்டர் அய்யா அவர்களின் உ ரைவீச்சு

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னர் ... டாக்டர் அய்யா அவர்களின் உ ரைவீச்சு :.......தொல்காப்பியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களை ஐந்து வகைகளாகப் பிரித்தார்கள். அதனுடைய அடிப்படையில் தான் மக்களையும் பார்த்தார்கள். குறிஞ்சி என்று அழைக்கப்படக்கூடிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மலைவாழ் மக்கள். முல்லை என்று அழைக்கப்படக்கூடிய மலையினுடைய அடிவாரத்திலே வாழ்ந்த மக்கள் இடையர்கள். ஆறுகள், ஆறுகளுடைய படுகைகள், எங்கே நீர்ப்பகுதி இருக்கிறதோ அங்கே வாழ்ந்தவர்கள் மருதநில மக்கள், அவர்கள் தான் தேவேந்திரகுல வேளாளர்கள், அவர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள்.
இந்த அரசு இந்த தமிழ் மக்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டுமென்று சொன்னால் நீங்கள் தமிழர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டுமென்று சொன்னால் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு சமமான அங்கீகாரம் கொடுக்காமல் நீங்கள் தமிழகம் என்று சொல்லிக்கொள்வதிலோ தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதிலோ அல்லது திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்வதிலோ அர்த்தமே கிடையாது என்பதை இந்த நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன்.
எனவே இந்த அரசு இன்னும் எட்டு மாத காலம் இருக்கிறது, வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரனாருடைய பிறந்த தினம் வரப்போகிறது, அதற்குள்ளாக நிச்சயமாக இந்த அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்று நான் கருதுகிறேன். இல்லையென்றாலும் புதிய தமிழகம் அதைப் போராடிப் பெறும் என்பதையும் இந்த நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன். புதிய தமிழகத்திற்கு போராட்டம் என்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால் போராடாமல் கொடுக்க வேண்டியதுதான் அரசுக்கு அழகு என்பதையும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
நீங்கள் கிலோ கணக்கிலே எதோ தங்கமெல்லாம் கொடுக்கிறீர்கள். ஆனால் நாங்கள் இப்போது கேட்பது ஒரு சிறிய அடையாளம் மட்டும் தான். நாங்கள் வேறொன்றும் புதிதாகக் கேட்கவில்லை, தேவேந்திரகுல வேளாளர்கள் என்ற ஒரு சிறிய அடையாளம், தியாகி இம்மானுவேல் சேகரனாருடைய பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுதல் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனாருடைய பிறந்த நாள், நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். இவை மூன்று தான் நாம் கேட்கக் கூடிய மிக முக்கியமான கோரிக்கைகள்.
எனவே இந்த மூன்று கோரிக்கைகளையும் இன்றைய அரசு எஞ்சி இருக்கக்கூடிய காலகட்டங்களில் நிறைவேற்றித் தரும், இல்லையென்று சொன்னால் நிறைவேற்றித் தரக்கூடிய அரசை உருவாக்கித் தரக்கூடிய சக்தி புதிய தமிழகத்திற்கு உண்டு என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

1 கருத்து: