ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் நடப்பது என்ன ..?..

திருவாடனை கோவில் வழிபாட்டிற்கான குதிரை எடுப்புவிழாவில் நான்கு தேவேந்திரர்களை பலிகொடுத்தோம் மதம் மாறியும் அவலங்கள் தொடர்கின்றன ..இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் நடப்பது என்ன ..?.... வஞ்சகம் , சூழ்ச்சியின் மூலம் ஓரு தேவேந்திரர் எரிப்பு ..... கொடியங்குளத்தில் காட்டிகொடுத்த பாதிரியார் கும்பல் மீண்டும் திருவாடனையிலா ..?.. திருவாடனை தாலுகாவிற்குட்பட்ட, ஓரியூர் கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் கனிசமாக வாழ்ந்துவருகிறார்கள். இக்கிராமத்தல் கடந்த 29 ம் புனித அருளாளந்தர் ஆலத்தில் அரோக்கிய அண்ணையின் பிறப்பு விழா கொடியேற்றத்துடன் தொடங்கபட்டுள்ளது.
இவ்விழாவில் இந்த முறை சபை பாதிரியார் , மற்ற ஆதிக்க சாதியினருடன் சேர்ந்துகொண்டு தேவேந்திர குல வேளாளர்களுக்கு மண்டகபடி உரிமையை தர மறுத்துள்ளான். இதனால் வெகுண்டெழுந்த நம் இரத்த உறவுகள் பாதிரியார் மற்றும் ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக ஒருங்கணைந்தனர். இதனால் காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டது. சூழ்ச்சி செய்த பாதிரியார் , பேச்சுவார்த்தைக்காக தேவேந்திரர் பிரதிநிதியை ஆலயத்திற்குள் அழைத்துள்ளான். பேச்சுவார்த்தைக்கு சென்ற . சார்லஸ் தேவேந்திரர் பாதிரியாரின் கட்டளைக்கு இணங்க மறுக்கவே, ஆதிக்க சாதி வெறியர்கள் மற்றும் காவல்துறை துணைகொண்டு பாதிரியார், சார்லஸ் தேவேந்தரனை தீயிற்கு இறையாக்கி உள்ளான்.
தற்பொழுது நம் இனச்சொந்தங்களுடன் , எனது ஆருயிர் நணபர் லெனின் அவர்கள், நீதி கிடைக்கும் வரை சார்லஸ் தேவேந்திரனின் உடலை வாங்கமாட்டோம் என போராட்டகளத்தில் உள்ளார். அதேவேலையில் தகல் அறிந்து ஓரியூர் வரும் நம் இனச்சொந்தங்களை தடுத்துவருகிறது காவல்துறை. சாதி ஆதிக்கத்திற்கு மீண்டும் ஓர் உயிர்பலி கொடுத்துள்ளது நம் சமூகம்.
குறிப்பு : பாதிரயார் உடையார் இனத்தைச் சார்ந்தவன்.
இதர சாதி கிருத்திவர் மற்றும் முஸ்லீம்களை, கிறித்துவ மற்றும் முஸ்லீம்களாக பார்க்கும் இதே சமூகம்! தேவேந்திர இன கிறித்துவ, முஸ்லீம்களை மட்டும் தேவேந்திரனாகவே பார்க்கிறது. இதை நாம் புரிந்துகொண்டு மதம் கடந்து தேவேந்திரர்களாய் ஒன்றிணைவோம்.
இத்தருணத்தில் சார்லஸ் தேவேந்திரணுக்கு வீரவணக்க வணக்கத்தை செலுத்துவதுடன் பத்திரிக்கைதுறையை வண்மையாக கண்டிக்க வேண்டும். ஆம்! நடந்த உண்மை சம்பவத்தை மறைத்து தவறான செய்திகளை வெளியிட்டுவருகறது தினத்தந்தி போன்ற முன்னனி பத்திரிக்கைகள். ஆம்! காவல்துறை உதவி கொண்டு சார்லஸ் தேவேந்திரர் ஆதிக்கச்சாதியினரால் தீயிட்டு கொழுத்தப்பட்டார். ஆனால் பத்திரிக்கைகளில் சார்லஸ் தானே தீயிட்டு தற்கொலை செய்துகொண்டார் என செய்தி பரப்பி வருகிறார்கள். இது போன்ற நயவஞ்சக செயலுக்கு துணைநிற்கும் தினதந்தி போன்ற முன்னனி பத்திரிக்கைகள் தேவேந்திரர்களிடம் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்! அன்று தெரியும் ஆதிக்க சாதி மற்றும் ஆளும் வர்க்கங்களுக்கு ஜால்ரா அடிக்கும் இந்த பத்திரிகை, ஊடகத்துறைகளுக்கு இந்த தேவேந்திர குல வேளாளர்கள் யார் என்று!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக