ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 30 மார்ச், 2011

டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம்





ஓட்டப்பிடாரம் தொகுதி, அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, இன்று மாலை தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார். அப்பொழுது, அதிமுக முன்னாள் செயலாளர் விபிஆர் சுரேஷ், தற்போதைய ஒன்றிய செயலாளர் சண்முகவேல் ஆகியோர் உடனிருந்தனர்.





இன்று அவர், அத்திமரப்பட்டியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை டாக்டர் கிருஷ்ணசாமி தொடங்கினார். அப்போது, அவர் பேசியதாவது : நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்கள் எனக்கு தெரியும். அத்திமரப்பட்டி கிராமம் 3 போகம் விளையும் பூமி. நான் சட்டமன்றம் சென்றால் இதற்காக குரல் கொடுப்பேன். விவசாயிகளை நான் பாதுகாப்பேன்.



ஓட்டப்பிடாரம் தொகுதியில் குடிநீர் சாலை வசதிகளுக்காக, பாடுபடுவேன். நான் இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, எதற்கும் 5 பைசா கூட வாங்கியது கிடையாது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானாலும் சரி, சாத்தான்குளத்தில் டாடா ஆக்கிரமிப்பு ஆனாலும் சரி நான் குரல் கொடுத்தேன். இது நண்பர் சரத்குமாருக்கு தெரியும். என்மீது முழு நம்பிக்கையுடன் எனக்கு நீங்கள் வாக்கு அளிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.



இதைத் தொடர்ந்து, அவர் அத்திமரப்பட்டி, குலையன்கரிசல், சேர்வைகாரன்மடம், கட்டாலங்குளம், முடிவைதானேந்தல், வர்த்தகரெட்டிபட்டி, திம்மராஜபுரம் ஆகிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக