ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 13 நவம்பர், 2013

மாமன்னர் ராஜராஜசோழ தேவேந்திரர் அவர்களின் 1028 சதய விழா...


தஞ்சாவூர்,
தஞ்சையில் மாமன்னர் ராஜராஜசோழன் சதயவிழாவையொட்டி தஞ்சையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் நிர்வாகிகளுடன் தஞ்சை காவேரி பண்டகசாலை அருகில் இருந்து ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட செயலாளர் தியாக.காமராஜ், மாவட்ட தலைவர் குருமூர்த்தி, இணை செயலாளர் அமீதுசுல்தான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் எனது தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது’’என்றார்.
இதே போல் சோழநாடு மள்ளர்மீட்புக்களம் சார்பில் மாநிலத்தலைவர் செந்தில் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தலைமை நிலைய செயலாளர் குமரமள்ளர், செய்தி தொடர்பாளர் பாஸ்கரசோழன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்காலாடி, மாவட்ட அமைப்பாளர் விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தேவேந்திரர் பேரவை சார்பில் ராஜராஜசோழன் சிலைக்கு நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்தார். இதில் தஞ்சை மண்டல பொறுப்பாளர் மலை.அர்ச்சுனன், இளைஞரணி புதியவன், நகர பொறுப்பாளர் வடுவையா, மாவட்ட பொறுப்பாளர் சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக