ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 13 நவம்பர், 2013

சபாநாயகர் இருக்கை அருகே சென்று தர்ணா: சட்டசபையில் இருந்து கிருஷ்ணசாமி வெளியேற்றம்...



 

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். இந்த தீர்மானத்தின் மீது கட்சி தலைவர்கள் பேசினர்.
தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டுதான் இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன் தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசும்போது, ‘காமன்வெல்த் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி குழு பிரதமரை சந்திக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். அவரது கருத்துக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
அதேசமயம் கிருஷ்ணசாமி, சபாநாயகர் இருக்கை அருகே சென்று தர்ணாவில் ஈடுபட முயன்றார். இதனால் அவரை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை சபைக் காவலர்கள் வெளியேற்றினர்.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக