ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 13 நவம்பர், 2013

சம்பத் கமிஷன் அறிக்கையை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...

சம்பத் கமிஷன் அறிக்கையை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பரமக்குடி சம்பவம் குறித்த சம்பத் கமிஷன் அறிக்கையை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணிச் செயலாளர் காளீஸ்வரி மற்றும் மாணவரணி செயலாளர் ஜெகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், பரமக்குடி சம்பவம் குறித்த சம்பத் கமிஷன் அறிக்கை தலித் மக்களுக்கு எதிராக இருப்பதால் உடனே திரும்ப வேண்டும். மேலும், யாரையோ திருப்திப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட கமிஷன் போல் இருக்கிறது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவில் இருந்து யாரும் பங்கேற்க கூடாது மற்றும் ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து இக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், ஆட்சியர் அலுவலகம் எதிரே பேருந்து நிறுத்தம் முன்பு நான்கு வழிச்சாலையில் நீதிபதி சம்பத்தின் கொடும்பாவியை புதிய தமிழகம் கட்சியினர்  எரித்தனர். அதையடுத்து, போலீஸார் விரைந்து வந்து கொடும்பாவியை அப்புறப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக