சென்னை: பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். அந்த அறிக்கை உண்மைக்கு மாறாக உள்ளது.
மேலும், புதிய தமிழகம் சார்பில் சென்னையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 30–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்" என்று கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக