சென்னை: "பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தற்காப்பு நடவடிக்கைதான்" என்று சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை கமிஷன் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், வன்முறையை தடுக்க துப்பாக்கிச்சூடு அவசியமாக இருந்தது என விசாரணை ஆணையம் கருதுகிறது என்றும், துப்பாக்கிச்சூடு நடத்தாமல் இருந்திருந்தால் தென் மாவட்டங்களுக்கு வன்முறை பரவியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக