பத்திரிக்கைகளில் இது வரை வெளிவராத செய்தி!
பார்ப்பனீயத்தின் படு பயங்கரமான சதி!
சமூக நீதிக்கு எதிரான சதி!
பி.ஜே.பி அரசை பயன்படுத்தி நடத்தப்படும் சதி!
வாசல் வழியாக நுழைய துணிவில்லாமல் கொல்லைப்புறம் வழியாக நுழையும் முறை!
அயோக்கியத்தனம்! அயோக்கியத்தனம்!
மத்திய தேர்வாணைக்குழு (UPSC-Union Public Service Commission) நடத்துகிற குடியுரிமைத் தேர்வுகள் மொத்தம் 23 பணிகளுக்காகத் தகுதி வாய்ந்த நபர்களை நியமனம் செய்யும் நோக்கில் நடத்தப்படுகிறது.
i.) Indian Administrative Service (I.A.S.) ii.) Indian Foreign Service (I.F.S.) iii.) Indian Police Service (I.P.S.) iv.) Indian P&T Accounts & Finance Service Group - A v.) Indian Audit & Account Service (I.A.A.S.) Group - A vi.) Indian Customs and Central Excise Service - GP-A vii.) Indian Revenue Service GP-A viii.) Indian Ordinance Factories Service GP-'A' ix.) Indian Postal Service - GP - 'A' x.) Indian Civil Accounts Service GP-'A' xi.) Indian Railway Traffic Service GP-'A' xii.) Indian Railway Accounts Service GP-'A' xiii.)Indian Railway Personal Service GP-'A' xiv.) Posts of Asst. Security Officer GP-'A' in Railway Protection Force xv.) Indian Defence Estates Service, GP-A xvi.) Indian Information Service (Junior Grade) GP-A xvii.) Indian Trade Service GP-A xviii.) Posts of Asst. Commandent GP-A in Central Industrial Security Force xix.) Central Secrateriat Service GP-B xx.) Railway Board Secretariat Service GP-B xxi.) Armed Forces Head Quarters Civil Service GP-B xxii.) The Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service GP-B xxiii.) Pondicherry Police Service, Group – B
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் பார்ப்பனர்கள் மட்டுமே கோலோச்சி வந்த நிலையை மாற்றியது சமூக நீதிக் கொள்கைகள்!
சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள, பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனங்களை சார்ந்தவர்கள், ஏற்கனவே உயரிய நிலையில் உள்ளவர்களோடு போட்டி போட இயலாது என்ற நிலையை கருத்தில்கொண்டு சில சலுகைகள் வழங்கப்பட்டன.
அதாவது, பொது பிரிவில் வரக்கூடியவர்களின் வயது உச்ச வரம்பு 30 ஆகவும், இதர பிற்படுத்தப் பட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு 33 வயதாகவும், பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு 35 வயதாகவும் இருந்தது.
காடுகளிலும், மலைகளிலும், கிராமங்களிலும் வாழும் இம்மக்களின் சமூக பொருளாதார நிலை, எந்த வகையிலும் உயர் ஜாதியினரின் நிலையோடு பொருந்தாத நிலை இன்றும் நிலவுவதுதான் எதார்த்தம்.
இந்த நிலையிலும், இந்த பிரிவை சேர்ந்தவர்கள், தங்களது சுய முயற்சியால், விடா முயற்சியால், உழைப்பால் இப்பதவிகளில் வந்தமர்ந்துள்ளனர்!
இப்பதவிகளில் முதன்மையானவைகளாக இருக்கும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் பதவிகளில் வரும் இந்த பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் பொதுவான வயது, முப்பது வயதிற்கு மேற்பட்டதாக இருப்பதுதான் வழக்கம்.
காரணம், அவர்களது சமூக பொருளாதார சூழல்! இதை யாரும் மறுக்க முடியாது!
இந்நிலையில், பி.ஜே.பி ஆளும் மத்திய அரசாங்கம், இந்த வயது உச்ச வரம்பை ஐந்து ஆண்டுகள் குறைத்துள்ளது, 2015 ஆண்டில் இருந்து அமுலுக்கு வருமென தெரிவித்துள்ளது!
இது நேரடியாகவும், மறைமுகமாகவும், பட்டியலின, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்களை பாதிக்கும் நடவடிக்கை!
இது சமூகத்தில் உயர் சாதியினராக இருப்பவர்களுக்கும், உயரிய நிலையில் இருப்பவர்களுக்கும் சாதகமாக அமையும்!
முக்கியமான அரசுப்பணியை செய்யும் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள், கீழ்மட்ட நிலையில் உள்ள மக்களின் நிலையை அறியாத உயர்மட்ட நிலையில் வளர்ந்தவர்களாக இருந்தால், அது மக்களுக்கும் நாட்டிற்கும் நல்லதல்ல!
யாரோ? எக்கேடோ? என்று இருக்கும் சூழல் அல்ல இது!
உங்கள் வேட்டி உங்களுக்கே தெரியாமல் உறுவப்படும் நேரமிது!
அம்மணமாவதற்கு முன் விழித்தெழுங்கள்!
இது நம் உரிமையை மீட்க வேண்டிய நேரம்!
இது நம் வருங்கால சந்ததியை காக்க வேண்டிய நேரம்!
நாட்டில் மூன்று அல்லது மூன்றரை சதவிகிதம் உள்ள சிலரது நன்மைக்காக ஒட்டுமொத்த நாட்டின் நலனை பலி கொடுக்க வேண்டுமா?
சிந்தியுங்கள்! சினம் கொள்ளுங்கள்! சீறிப் புறப்படுங்கள்!