இமானுவேல் சேகரனா ருக்கு அரசு விழா எடுக்க கோரி புதிய தமி ழகம் கட்சியினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தேவேந்திர குலத்தார், காலாடி, குடும்பர், பள்ளர், பன்னாடி ஆகிய இனத்தவர் களை ஒருங்கிணைத்து தேவேந் திர வேளாளர் என அழைக்க வேண்டும். ஆதிதிராவிடர் என்பதை நீக்கி பட்டியல் இன மக்கள் என்று அழைக்க வேண் டும்.
இமானுவேல் சேகரனா ருக்கு அரசு விழா எடுக்க வேண்டும். உள்ஒதுக்கீடை நீக்க வேண்டும். பால்விலை உயர்வை ரத்து செய்ய வேண் டும்.
இலங்கையில் தூக்கு தண் டனை விதிக்கப்பட்ட 5 பேர் களையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சண்முக ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செய லாளர் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் உடை யப்பன், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வீட் டன், நிர்வாகிகள் இந்திரஜித், காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக