அரசியல் சூழ்ச்சி, வஞ்சகங்களாலேயே கவுரவக் கொலைகள் நடைபெறுகின்றன என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் க.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய டாக்டர்.க.கிருஷ்ணசாமி, "தமிழகத்தில் தற்போது சாதிக்கலவரங்கள் அதிகரிக்கத்தொடங்கி உள்ளன. கடந்த 2012இல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களில் பரமக்குடியில் 7 பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். கடந்த ஆண்டு தர்மபுரியில் இருவேறு சமூகத்தினரின் காதல் திருமணத்தையொட்டி, கலவரம் நடந்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இது பரவி வருகிறது.
குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் 66 கொலைகள் நடந்துள்ளன. இந்த கொலைகள் அனைத்தும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பயிற்சி பெற்ற கூலிப்படையினர் மூலமாகவே நடத்தப்படுகிறது. இவர்களுக்கு போலீஸ்காரர்களின் துணை உள்ளது.
அரசியல் சூழ்ச்சி, வஞ்சகங்களாலேயே இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன. இந்த கொலைகள் அனைத்தும் அற்ப காரணங்களுக்காகவே செய்யப்பட்டு உள்ளன. உசிலம்பட்டி, ராமநாதபுரம் பகுதிகளில் கவுரவ கொலைகள் நடந்து உள்ளன" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக