ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 24 நவம்பர், 2014

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை விளக்கி 10 ஆயிரம் கிராமங்களில் புதிய தமிழகம் கட்சிதிண்ணைப் பிரசாரம்...

23.11.2014 அன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளா் சமுதாயத்திற்கு எதிராக நடைபெறும் தொடா் படுகொலைகளை சம்பந்தமாக தேவேந்திரகுல வேளாளா் சமுதாயகிராமத் தலைவா்கள் மற்றும் புதிய தமிழகம் நிா்வாகிகள் கூட்டம் புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவா்கள் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்.
தீா்மானம்-6
1989ம் ஆண்டு பட்டியலின வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் 2014ம் அண்டு திருத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை பட்டியலின பிாிவினா் முறையாக தொிந்து கொள்ளும் பொருட்டு தங்களுக்கு எதிராக அன்றாட நடைபெறும் சமூக கொடுமைகள் மற்றும் தனிநபா் கொடுமைகள் அனைத்திற்கும் தீா்வு காணும் பொருட்டு வரும் 3 மாதங்களில் முதல் கட்டமாக 10ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம், துண்டு பிரசுரங்கள், வாகன பிரசாரம், பொதுக் கூட்டங்கள் வாயிலாக எடுத்து செல்வது என இக்கூட்டம் முடிவுசெய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக