ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 18 நவம்பர், 2014

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்கொடுமை தாக்குதல் அதிகரித்துவிட்டது டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்..


நெல்லை,
“நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வன்கொடுமை தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன” என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
பரமக்குடி துப்பாக்கி சூடுகடந்த 1991–ம் ஆண்டு முதல் 1995–ம் ஆண்டு வரை நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தென் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடந்த தாக்குதலில் பலர் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நடந்த சாதிக்கலவரம் 10 ஆண்டுகள் நீடித்தது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கும், மக்களிடையே சமுதாய நல்லிணக்கம் ஏற்படுவதற்கும் புதிய தமிழகம் கட்சி பெரும் முயற்சி எடுத்தது. மக்களிடையே சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு செப்டம்பர் மாதம் பரமக்குடியில் தேவேந்திரகுல வேளாளர்கள் 7 பேர் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீண்டும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது ஆங்காங்கே ஆதிக்க சாதியினரால் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்த தாக்குதல் சம்பவங்கள் கடந்த 2 மாதமாக அதிகரித்து உள்ளன. இந்த 2 மாதத்தில் மட்டும் 20–க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.
குரல் கொடுக்க வேண்டும்இந்த கொலையில் தொடர்புடைய கும்பல் நெல்லை, ஸ்ரீவைகுண்டத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களும், தமிழக நலனில் அக்கறை உள்ளவர்களும், அரசியல் கட்சியினரும், கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க குரல் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இதனால் நெல்லை–தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் ஈடுபடவேண்டும் என்று கவர்னருக்கும், மத்திய உள்துறை மந்திரிக்கும் கடிதம் எழுதவும், அவர்களை சந்தித்து பேசவும் உள்ளேன்.
பேரணிநெல்லை–தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் வன்கொடுமை தாக்குதலை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நெல்லை, ஸ்ரீவைகுண்டத்தில், கண்டன பேரணி நடத்த உள்ளோம். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறோம். கால்வாய் கிராமத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இது கண்டனத்துக்கு உரியது.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக