ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 24 நவம்பர், 2014

திருச்செந்தூர் – மூவேந்தர் மரபினரான தேவேந்திரர் குல வேளாளர்களின் மடம் திறப்பு விழா..

திருச்செந்தூர் பகுதியில் உள்ள 120 ஊர்களைச் சேர்ந்த மள்ளர் குல மக்கள் இணைந்து, திருச்செந்தூரில் நம் இனத்துக்குப் பாத்தியப்பட்ட மடம் ஒன்றின் அருகிலேயே பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய மடம் ஒன்றைக் கட்டி எழுப்பியுள்ளார்கள் . இதன் திறப்பு விழா  03-10-2014 வெள்ளிக்கிழமைகாலை 9.15 மணி முதல் 10.15 மணியளவில் நடைபெறுகிறது. திறப்பாளர் திருமிகு.விஞ்ஞானி.வேலாயுதம் IES, தலைவர் மாகாரஷ்ட்ரா ஒழுங்குமுறை ஆணையம்,மும்பை.2
குத்துவிளக்கு ஏற்றுபவர், திருமதி.சித்ரா வேலாயுதம் அவர்கள். இந்த விழாக்கான ஏற்பாடுகளை செய்த குழுத்தலைவர்கள், L.பாலசுப்பிரமணியன், I.ரங்கநாதர் பொறியாளர், ஆகியோர்கள் சிறப்பாக செய்துள்ளனர். தேவேந்திர குல பெருமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இந்த வரலாற்று நிகழ்வுக்காக இவ்விழாவில் தொடர்புடைய அனைத்து உறவுகளையும் மருதம் தொலைக்காட்சியின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக