ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 21 மார்ச், 2015

சட்டம் ஒழுங்கு அரசிடம் இல்லை. கூலிப்படையினர் கையில் சென்றுவிட்டது.. டாக்டர் க.கிருஷ்ணசாமி ..

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் 105 கவுரவ கொலைகள் நடந்துள்ளன. இதை சட்டமன்றத்தில் நான் சுட்டிக்காட்டியபோது முதல்வர் அதை மறுத்தது கொலையாளிகளுக்கு ஊக்கமாகிவிட்டது. பள்ளிகளில் அண்மைக்காலமாக சாதிய தலைவர்களின் தினங்களை குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் கொண்டாடுகின்றனர். அப்போது சிறு மோதல்களில் தொடங்கி கொலை சம்பவங்களில் முடிகிறது. எனவே, அந்த தினங்களை கொண்டாட அனுமதிக்கக் கூடாது என்று பள்ளி மற்றும் கல்லூரிகள் இயக்குனர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.கிருஷ்ணகிரி கருவானூர் கிராமத்தில் கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் அரவிந்தனை தாக்கியதோடு மட்டுமல்லாமல் சிறுநீர் பெய்து அவமானப்படுத்தியுள்ளனர். 

தமிழகத்தில் கவுரவ கொலை கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். சட்டம் ஒழுங்கு அரசிடம் இல்லை. கூலிப்படையினர் கையில் சென்றுவிட்டது. எனவே, மத்திய அரசு நேரடியாக தலையிட்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் ஒரு குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும். இதையெல்லாம் வலியுறுத்தி சென்னையில் மே 6ம்தேதி பெரிய அளவில் பேரணி நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக