கார்த்திக் நடித்த கொம்பன் திரைப்படம் ஏப்ரல் 2 ம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அந்தப் படத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர் புதிய தமிழகம் கட்சியினர். இந்தப் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும், வசனங்களை நீக்க வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கேட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று கிருஷ்ணசாமிக்கு சென்னையில் பிரிவியூ ஷோ காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த பின் கிருஷ்ணசாமி படம் வெளி வந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் தணிக்கை குழுவுக்கு புகார் மனுவை அளித்தார். மதுரை நீதிமன்றத்தில் ஒரு அவசர வழக்கும் தொடர்ந்துள்ளார். தங்கள் எதிர்ப்பின் ஒரு பகுதியாக படத்தை தடை செய்ய கோரி திருச்சியில் புதிய தமிழக கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஐயப்பன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை தடுத்து 34 பேரை கைது செய்து அருண் ஓட்டலில் உள்ள சுமங்கலி மகா ஹாலில் அடைத்து வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக