ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 26 ஆகஸ்ட், 2015

ராமதாசின் வாலை ஒட்ட நறுக்குவோம்!... டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D,M.L.A .,




தென் தமிழகம் அடிக்கடி சாதிய மோதல்களுக்கு இலக்காகி அமைதி இழந்திருந்ததை நாடறியும். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மதுரையை மையமாகக் கொண்ட தென் மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தேறின. அதில் தேவேந்திரகுல வேளாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் சிலைமான் என்ற இடத்தில் இரு சமுதாயங்களிடையே மோதல்; திருமங்கலம் குராயூரில் அடிக்கடி மோதல் மற்றும் கொலைகள்; உசிலம்பட்டி பகுதியில் மோதல்; நெல்லை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் பட்டியலின மக்கள் படுகொலை என தொடர்கதையாயின.
1957-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனார் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தென் தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் முக்குலத்தோருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு அதனால் தென் தமிழகமே கலவர பூமியானது. மேலும் 1997-ஆம் ஆண்டு விருதுநகரை மையமாக வைத்து வீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக்கழகம் உருவாக்கப்பட்டபோது முக்குலத்தோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் முக்குலத்தோர்க்கும் எண்ணற்ற மோதல்கள் ஏற்பட்டு உயிர்சேதமும் பெருத்த பொருட்சேதமும் ஏற்பட்டது. அப்பொழுதே தேவேந்திரகுல மக்கள் மதுரை விமான நிலையத்திற்கும், இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் தியாகி இம்மானுவேல் சேகரன் பெயர் சூட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பலமாக எழுப்பினர்.
சுந்தரலிங்கம் பெயரை நீக்வேண்டும் என்பதற்காகவே அம்பேத்கர், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களில் இயங்கிவந்த போக்குவரத்துக்கழகங்களும் மாவட்டப் பெயர்களும் நீக்கப்பட்டன. தமிழக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேருந்துகள், கல்விநிலையங்கள், மாவட்டங்கள், அரசுக் கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு எதிர்காலத்தில் எந்தவொரு தலைவரின் பெயரையும் சூட்டக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின்படியே கடந்த 18 வருடங்களாக எந்தவொரு தலைவரின் பெயரும் எதற்கும் சூட்டப்படாமல் இருந்தது. இதனால் தென் தமிழகத்தில் ஓரளவுக்கு அமைதி நிலவிவருகிறது .
அரசியல் காரணங்களுக்காக மீண்டும் தென் தமிழகத்தில் சிலர் சாதித் ‘தீ ’ மூட்ட முயற்சி செய்கின்றனர். மதுரை விமான நிலையத்துக்குக்கும் ஓடுபாதைக்கும் 1932, 1935, 1942, 1950, 1999 ஆகிய ஆண்டுகளில் தங்களது நிலங்களைக் கொடுத்தவர்கள் அதற்கு அருகேயுள்ள சின்ன உடைப்பு கிராமத்து தேவேந்திரகுல வேளாளர்கள் ஆவர். எனவே மதுரை விமான நிலையத்துக்கு பெயர் வைக்க வேண்டுமாயின் அதற்கு நிலங்களைக் கொடுத்த தேவேந்திரகுல மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரையே சூட்டவேண்டும்.
தென் தமிழகத்தில் நிலவும் சமூக சூழ்நிலைகளை நன்கு அறிந்திருந்தும் ஏதும் அறியாதவர் போல மீண்டும் முக்குலத்தோருக்கும் தேவேந்திர குல வேளாளருக்கும் மோதலை உருவாக்கி சிந்தும் இரத்ததின் மூலம் அரசியல் லாபம் தேட துடிக்கும் வகையிலேயே ராமதாஸ் சம்பந்தமே இல்லாமல் மதுரை விமான நிலைய பிரச்சினையை கிளப்புகிறார் .
வடமாவட்டங்களில் கெளரவக் கொலைகளை நிகழ்த்தி, ஆதி திராவிடர்களுக்கு (பறையர்கள்) எதிராக அணிதிரட்டியத்தை போல தென் தமிழகத்திலும் தேவேந்திர குல வேளாளருக்கு (பள்ளர்கள்) எதிராக முக்குலத்தோரை அணிதிரட்ட எண்ணுகிறார். அவருடைய முயற்சி எள்ளளவும் வெற்றி பெறாது. தென் தமிழக தேவேந்திரகுல மக்கள் ராமதாஸின் நயவஞ்சகத்தை நன்கு புரிந்தே அவரை ஏற்கனவே ஒதுக்கித் தள்ளினர். எனவே அவரது இந்த முயற்சியும் பலிக்காது. பா.ம.க.-வின் நரித்தனத்தை தென் தமிழகத்தில் காட்ட முற்பட்டால் அதன் வால் ஒட்ட நறுக்கப்படும் என்பதை புதிய தமிழகம் எச்சரிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக