ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 13 செப்டம்பர், 2012

இமானுவேல் சேகரன் நினைவு நாள்: மதுரை மாவட்டத்தில் 2,500 போலீசார் குவிப்பு-10 இடங்களில் சோதனை சாவடிகள்

 
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. கடந்த ஆண்டு போல் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க இந்தாண்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழக ஏ.டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) ஜார்ஜ் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளார்.
 
மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா காவல்துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.  
 
இதையடுத்து மதுரை மாவட்டத்தில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிமாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக பரமக்குடி செல்லும் வாகனங்களை கண் காணிக்கும் வகையில் 10 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
 
திண்டுக்கல் சாலை, விரகனூர், சுற்றுச்சாலை சந்திப்பு, பசுமலை, அவனியாபுரம், உத்தங்குடி உள்பட அனைத்து இடங்களிலும் மதுரைக்குள் நுழையும் சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் அதிரடி படையினர் சிறப்பு காவல்படை போலீசார் வெளி மாவட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 
ஒவ்வொரு சோதனை சாவடியிலும் தலா ஒரு டி.எஸ்.பி. தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வீடியோ மற்றும் கண்காணிப்பு கேமிரா வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.  
 
மதுரை புறநகர் பகுதியில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு தற்போது கூடுதலாக்கப்பட்டு கண்காணிப்பும் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது என காவல்துறை அதிகாரிகள் கூறினர். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் வெளியூர் வாகனங்களை அனுமதிக்காமல் வேறு வழியில் அனுப்பிடவும் கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
 
மேலும் மாநகர போலீசாருடன் ஆயுதப்படை, சிறப்பு காவல்படை போலீசார் என 800க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக