கடந்தாண்டு செப்டம்பர் 11ல் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை 5 முனை பகுதியில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் இறந்தனர்.
இம்முறை அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
டிஐஜி ராமசுப்பிரமணியன் தலைமையில் மதுரை, கோவை, சேலம் உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து 15க்கும் அதிகமான எஸ்பிக்கள் பரமக்குடி வந்துள்ளனர். பரமக்குடி 5 முனை சாலை, ஆர்ச் பகுதி, பஸ் ஸ்டாண்ட், இமானுவேல் நினைவிடம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி நிகழ்ச்சிகள் கண்காணிக்கப்படுகிறது. அசம்பாவிதங்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரமக்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக