ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 8 செப்டம்பர், 2012

இமானுவேல் சேகரன் நினைவு நாளை அமைதியாக நடத்த ஒத்துழைக்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் வருகிற 11-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே தினத்தில் பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியானார்கள். இந்த சம்பவ இடத்தில் இருந்த 4 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கோரி புகழேந்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவராமன் ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சம்பவம் நடந்தபோது பரமக்குடி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. சத்திய மித்தல் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த ஆண்டு நினைவு நாள் அமைதியாக நடத்த போலீசார் உரிய பாதுகாப்பை எடுத்து உள்ளார் என்றார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

இமானுவேல் சேகரன் நினைவு நாளை அமைதியாக நடத்த தேவையான பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. அதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மேலும் அன்றைய தினம் நடைபெறும் நினைவு நாள் நிகழ்ச்சியை அமைதியாக நடத்துவதற்கு கிராம மக்களும், பல்வேறு இயக்கங்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக