ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் வட்டத்தில் நிலத்தடி நீர் விற்பனை செய்வதை
தடை செய்து வெளியிடப்பட்ட ஆர்டிஓ.,தடையாணையை அமல்படுத்தக் கோரி நேற்று
ஓட்டப்பிடாரம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஓட்டப்பிடாரம் பகுதியில் தொழிற்சாலைகளுக்கு லாரிகளில் நிலத்தடி நீர் எடுக்க
கோவில்பட்டி ஆர்டிஓ.,தடையாணை பிறப்பித்தார்.
ஆனால் தொடர்ந்து நிலத்தடிநீர் லாரிகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்தும், தொழிற்சாலைகளுக்கு நிலத்தடி நீர் கொண்டு செல்வதை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று ஓட்டப்பிடாரம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ.,கிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசினார். ஓட்டப்பிடாரம் யூனியனுக்குட்பட்ட பஞ்.,தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிலக்கோட்டை எம்எல்ஏ.,ராமசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக